உள்ளடக்கத்துக்குச் செல்

நேரு தந்த பொம்மை/தங்கை பிறந்தாள்

விக்கிமூலம் இலிருந்து



தங்கை பிறந்தாள்


தங்கைப் பாப்பா பிறந்தி ருக்கும்
செய்தி கேட்டதும்-உடன்
தாவிக் குதித்துச் சிறுவ ரான
ஜவஹர் சென்றனர்.
“எங்கே, எங்கே எங்கே என்றன்
தங்கை?” என்றனர்;-மிக
இனிய குரலில் கேட்டுக் கொண்டே
அறையில் புகுந்தனர்.

அங்கி ருந்த டாக்டர் ஒருவர்
ஜவஹர் லாலிடம்-“தம்பி,
அதிர்ஷ்டக் காரன் நீதான்” , என்றே
தட்டிக் கொடுத்தனர்.
“தங்கை யாகப் பிறந்த தாலே
அப்பா சொத்திலே-நீ
பங்கு கொடுக்கத் தேவை யில்லை,”
என்றும் கூறினர்.