பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் §§ என்று கூறுவாள். ஊரவர் கெளவை சில நாள் நிகழும்; எருவும் சிலகால் இடப்பெறும். நீர் அடிக்கடி பாய்ச்சப்பெறும்; அன்னையும் அடிக்கடி வெகுண்டு வெஞ்சொல் கூறுவள். ஆதலால் ஊரவர் கெளவையை எருவாகவும், அன்னையின் சொல்லை நீராகவும் உருவகஞ் செய்து காட்டிய வள்ளுவரின் நுண்ணறிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இக்குறளின் கருத்தை நம்ம்ாழ்வார் மகள் பாசுரத்தில் ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர் மருத்து ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனிநம் கண்ணன் தோழி! கடியனே' |முளைத்த-முளைப்பித்த பெருஞ்செய்-பெரிய வயல்) என்று அருளிச் செய்திருப்பது அநுபவிக்கத் தக்கது. பெருஞ் செய்' என்பதற்கு 'ஸ்ம்ச்லேஷ விச்லேஷங்களாலே புடைபடுத்தி நித்ய விபூதியோ பாதி பரப்புடைத்தாம்படி பெருக்கினானா யிற்று' என்ற நம் பிள்ளையின் ஈடும் சுவைத்து மகிழத் தக்கது. இந்த உண்மையை நன்குணர்ந்த தொல்காப்பியரும், அலரில் தோன்றும் காமத்து மிகுதி' என்று நூற்பா செய்துகாட்டுவர். வள்ளுவர்படைத்த தலைவியும், நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்" (நுதுப்பல்-அவித்தல்) என்ற குறளால் ஊரார் எடுக்கும் அலரால் காமத்தை அவிக்கலாம் என்று கருதுதல் நெய் பெய்து எரியை அவிக்கலாம் என்று கருதுவதனோடொக்கும் என்று விளக்குவள் முல்லை நிலத் தாய் ஒருத்தி தன் மகளைச் சிறிது கடிந்துரைக் கின்றாள். இதேறிந்த அக்கம் பக்கத்துப் பெண்டுகள் அவளுக்கும் 50. திருவாய்: 5.3:3 51. கற்பியல்-22 (இளம்). 52. குறள்-148