பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 149 ാ கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே.* (கருங்கர்ல் - கரிய அடியையுடைய வீ - பூக்கள்; உகு - உதிர்ந்த துறு கல் - குண்டுக்கல்: இருபுலி - பெரிய புலி: குருளை- குட்டி எல்லி - இரவில்: நல்லை - நன்மை தருவதாய்! இதில் நிலவை நோக்கி 'வெண்ணிலவே, காட்டிடை இரவில் வருநர் களவிற்கு நீ நல்லை அல்லை' என்று கூறுகின்றாள் தோழி. தலைவன் காட்டிடை வருங்கால் வழியில் வேங்கைமலர் உக்க பாறையைத் வேங்கைக் குருளை என அஞ்சச் செய்வதாலும், ஊரின்கண் உள்ளார். அவன் வருகையைக் கண்டுகொள்வதற்கு ஏதுவாதலாலும் நெடுநேரம் எரிக்கும் வெண்ணிலவினை நல்லை அல்லை என்றாள். நிலவை நோக்கிக் கூறுவாளாய், இங்ஙனம் ஒழுகுதல் ஏதம் தரும் என்று தலைவனுக்கு அறிவுறுத்திக் குறிப் பினால் வரைவு கடாவுகின்றாள் தோழி. ஐங்குறுநூற்றில் வரும் தோழி ஒருத்தி வரைவு கடாதல் நுட்பமாக அமைந்துள்ளது. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரு நாட நடுநாட் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே! |கொடிச்சி - குறிஞ்சி நிலத்துப் பெண்; ஏனல் பெருங்குரல் - திணையின்கண் விளைந்த பரியகதிர்; அடுக்கல். பக்க மலை நடுநாள் கங்குல் - நள்ளிரவு: கடுமா - புவி முதலிய ஆற்ற லொடு புணரும் வல்விலங்குகள் இதில் தோழி இரவின்கண் தலைவன் இடையூறு மிக்க காட்டி னுாடே புகுந்து வருதலான் அவனுக்கு ஏதம் வருதல் கூடும் என அஞ்சி இரவுக்குறி மறுக்கின்றாள். கடுமா தாக்கின் என்றவள் பின்னர் நிகழும் நிகழ்ச்சிகளை வாயாற் கூறவும் அஞ்சியவளாய் அவற்றைக் கூறாது விடுத்தி: அறியேன் யான் என முடிக்கும் 144. குறுந். 47. தம்மால் விரும்பப்படாத நிலவை நெடு . வெண்ணிலவு என்று கூறுவதாக அம்ைந்த சிறப்பால் இதனைப் பாடிய நல்லிசைப் iன்னர் என்னும் பெயர் பெற்றார். 145, ஐங்குறு. 296, 1卤8