பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


166 அகத்திணைக் கொகைகள் அறிவிக்கின்றது. காரணம் என்ன? அறத்தொடு நிற்பதால் ந்ாணத்துக்கு இழுக்கு வரும். அந்த நாண் இழுக்குக்கு உரியவள் தலைவி. கற்பின்பொருட்டு நானக் குறைவு வரினும் வருக என்று துணிய வேண்டியவள் அவள். அத்துணிவை அறிந்த பின்னரே தோழி அறத்தொடு நிற்றலை மேற்கொள்ள வேண்டும். நொதுமலர் வரைவும் வெறியாட்டெடுத்தலும் போன்ற அரிய பெரிய தொல்லைகள் நிகழும் காலமே அறத்தொடு நிற்றற்குரிய காலம் என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாகும் இந்தக் காலத்தன்றித் தலைவி நாணைத் துறந்து அறத்தொடு நிற்பதை விரும்பாள். கவித்தொகைத் தலைவியின் கூற்று இது: "தலைவன் என் மெய்யைத் தடவித் தலையளி செய்தான். அவன் என்னை மணப்பது தவறுமாயின், நம் குடிக்கு அது வடுவாக அமைந்து விடும். தோழி! நயம் புரிந்து, இன்னது செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரைமே ' என நொதுமலர் வரைவுக்கு மனமுரசு இயம்பியவழி, கற்புடை நல்லாள் தாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்ற குறிப்பைத் தோழிக்கு உணர்த்துவது அறியத் தகும். இன்னது செய்தாள் இவள் எனத் தலைமகள் தன் களவை வெளிப்படையாகப் பகரப் பணிக்குங்கால் கற்புக்கு நாண் பலியாதலைக் காணலாம். இவ்வறத்தொடு நிற்றல் ஏழு பகுதிகளாக நடைபெறும் என்று தொல்காப்பியர் கூறுவர். - எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் கூறுதல் உசாவுதல் ஏதிடு தலைப்பாடு உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய என்மனார் புலவர் என்பது அவர் கூறும் நூற்பா. இதில் எளித்தல் என்பது, தலைவன் நம்மாட்டு எளியன் என்று கூறுதல். அதனது பயன் மகளுடைத் தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவாராகலின் எளியன் என்பது கூறி அறத்தொடு நிற்கப் பெறும். ஏத்தல் என்பது, தலைவனை உயர்த்துக் கூறுதல். அது மகளுடைத் தாயர் 'தலைவன் உயர்ந்தான் என்றவழி மனமகிழ்வராகலின், அவ்வாறு கூறப்பெற்றது; உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும். வேட்கையுரைத்தலாவது, தலைவன்மாட்டுத் தலைவி வேட் 173. டிெ-12 (நச். உரை). 174. கலி, 54 175. பொருளியல்-12 (நச்)