பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172 அகத்திணைக் கொள்கைகள் உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்." உள்ளுவன்-நினைப்பேன் மறப்பு-மறத்தலை அமர். போர்.) 'மறந்ததைத்தானே உள்ளுவது முடியும்? ஒருபோது மறவா திருப்பின் அப்பொருளை உள்ளுவது எப்படி முடியும்? முடியா தன்றோ? ஆகையால், யான் தலைவியை உள்ளுவேனல்லேன்' என்று தலைவன் தலைவியை உள்ளாமைக்குக் காரணம் கூறுகின்றான். தலைவன் ஒருவழித் தணந்தஞான்று அவனைத் தோழி இயற்பழிக்கும் ' என்று அஞ்சி அவள் கேட்குமாறு தன்னுள்ளே கூறுகின்றாள் வள்ளுவர் படைத்த தலைவி. கண்ணினுள் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர் இபருவரார் - வருந்துவது செய்யார், துண்ணியர் - நுட்ப மானவர்.) 'எம் தலைவர். காணப்பெறாமையால் சேய்மைக்கண் போயி னார் என்று கருதுவார் கருதுக, அவர் எம் கண்ணகத்து நின்றும் அகலார் யாம் அறியாது கண்களை இமைத்தாலும் அதனால் அவர் வருந்துவதும் இல்லை. ஆகலால், அவர் பிறரால் அறிய முடி யாத நுட்பத் தன்மையுடையார்’ என்று கூறுகின்றாள். எப் போதும் அவர் எம் கண்ணினுள் உள்ளாராகலின், யாம் கண் னினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யோம். மையெழுதும் காலம் வரையிலும் அவர் மறைத்திருத்தலை யாம் பொறுக்கலாற் றோம் என்கின்றாள். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரபாக் கறிந்து’’’ (கரபாக்கு-கரத்தல் (தொழிற்பெயர்) ) 'அவர், என் நெஞ்சினுள்ளும் உறைவதால் வெம்மையுள்ள பொருளையும் உண்பதற்கு அஞ்சுகின்றோம். அவர் வெய்துறலை யாம் பொறுக்கலாற்றோம்' என்று மேலும் கூறுகின்றாள். 186. குறள்.11.25, - 187. இயல்-தன்மை; பழித்தல்-பழிப்புள்ளதெனக் கூறுதல். அதாவது தலைவனது தகவின்மையைக் கூறுதலாம். 188. குறள்-1126. 189 டிெ-1127