பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் . 181 வழியிலே நடந்து தன்னுார்க்குச் செல்லுதல். இதனை ஒருவகைத் திருமண நிகழ்ச்சியாகவே தக்க சான்றுகளுடன் விளக்குவர் இளவழகனார்.’’’ திருமணம் என்பது தலைவனும் தலைவியும் தமக்குள் மறைவாய்க் காதலித்து வந்த உண்மையை வெளிப் படையான ஒருவகை நிகழ்ச்சி நன்முறையினால் எல்லார்க்கும் தெரியச் செய்தல்போல, இவ்வுடன்போக்கும் இன்னானை இன்னாள் காதலித்தனள் என்பதை வெளிப்படுத்துகின்றமையின் இஃது ஒருவகைத் திருமணமாகும் என்பதாக அந்த அறிஞர் கூறுவா. . இந்த உடன் போக்கு எப்பொழுது நிகழும்? அறத்தொடு நின்ற பின்னரும் தலைவி கருதிய காதலுக்குப் பெற்றோர் மனம் முடிக்க மறுத்தாராயின், இவ்வழிச் செலவு நிகழும் என்று எண்ணு வதற்கு இடம் இல்லை. காரணம், அறநிலையை அறிந்த பின்னர் பெற்றோர் மறுக்கார். தம் மகள் கற்பிழுக்கம்பட நடந்து கொள்ளார். எப்படியோ உரியவனுக்கே மனம் முடித்துத் தந்து விடுவர், தருவதில்லை என்ற நிகழ்ச்சி அகத்திணை இலக்கியத் தில் யாண்டும் காணப் பெறாது. இற்செறிப்பு, ஊரலர், வெறி யாட்டு, நொதுமலர் வரைவு என்று இத்தகைய சூழ்நிலைகளைக் கடத்தற்கு அகத்திணை நெறியில் இரண்டு வழி குறிப்பிடப் பெற்றுள்ளன. ஒன்று அறத்தொடு நிலை; மற்றொன்று உடன் போக்கு. இவற்றுள் ஒன்று நிகழின் மற்றொன்று நிகழாது. அறத்தொடு நின்றபின் உடன் போகார். உடன் போய பின்னர் அறத்தொடு நிற்பதால் பயனொன்றும் விளையாது. இரண்டில் ஒன்றுதான் களவு நாடகத்தின் இறுதிக் காட்சியாகும் என்பது அறிந்து தெளியப்படும். ஐங்குறுநூற்றில் ஒரு நிகழ்ச்சியைக் காட்டும் பாடல்: - - தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனங்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து டுசலதுே.??* தன்அமர்-தன்னைப் பெரிதும் விரும்பும்; ஆயம்-தோழியர் கூட்டம்; பனிவரை-பனிபடிந்த மலை; இனக்களிறு-பிடியும் கன்றுமாகிய இனத்துடன் திரியும் களிறு வயக்குறு-ஒளி மிக்க) - 203. பண்டைத் தமிழர் இன்பியல் លកទំនាគ-uគំ 101-102. - 204. ஐங்குறு-379. * . .