இல்லற நெறி 233
என்பது. துறவியர், பெரியோர்,பெற்றோர் சுற்றம் முதலியோரிடம் இன்ன இன்னவாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தலைவன் தலைவிக்குக் கூறுவதுதான் இது. அன்னார் தலைவிக்குப் புதியவர்களாதலின் அவரவர் இயல்பிற்கேற்றவாறு தலைவி நடந்து கொள்ள வேண்டுமன்றோ? குடும்பத் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அவள், அக்குடும்பத் தொடர் புடையோர் இயல்பறிந்து கொள்ளுதல் இன்றியமையாததன்றோ? இத்துணை நுட்பமாக அறிந்து ஒழுகிய பண்டையோரின் இல்லற வாழ்க்கை வியந்து போற்றற்குரியது. பாரதிதாசனின் குடும்ப விளக்கில் சித்திரித்துக் காட்டப்பெறும் தலைவியிடம் இப்பண்புக ளனைத்தையும் காணலாம்.
8距g >
அந்தரத் தெழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகல் என்பது. களவுக் காலத்தில் ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத்து எழுதிய எழுத்து அழிவதுபோல அழியும்படி பிராயச்சித்தம் செய்து ஒழுகுதல்’ என்பது இதன் பொருள். களவுக்காலத்து உண்டாய பாவமாவது, தீண்டத் தகாத நாட்களிலும் தலைவன் தலைவியைக் கூடியது முதலியன. இதனைத் தொல்காப்பியரே,
'மறைந்த ஒழுக்கத் தோரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை' என்று கூறியதனாலும் உரையாசிரியர்களது குறிப்புகளாலும் இதனை அறியலாம்.
ஆறு : r
நோன்மையும் பெருமையும் மெய்கொள அருவிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னி னாய தகுதி என்பது. தலைவனால் உளதாகிய பொறையையும் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொண்டிருப்பதனால், ஆராய்ச்சி மிக்க அந்தணரோடு கூடிச் செய்யத் தகும் சடங்குகளைக் செய்யும் தகுதியைக் குறிக்கின்றது
13. களவியல் -44 (தச்.)
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/251
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
