பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ಸಿಖಖ ಔ5,ಖಿ - - 237 வழங்குகின்றது. எந்நிலையிலும் - வாயில்கள் தலைவி முன்னர்த் தலைவனை இழித்துரையார். மனைவி தலைதாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை" (தலைதாள் - தாட்டலை) என்பது தொல்காப்பியம். தலைவன் தலைவியர் அன்பில்லாக் கொடுஞ்சொற்களைக் கூறுமிடத்து அவ்விருவர்முன் நில்லாது ஒன்றன்மேல் வைத்துச் சிறைப்புறத்தாராகக் கூறுவர். அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின் சிறைப்புறம் குறித்தன் றென்மனார் புலவர்' என்பது தொல்காப்பியர் கூறும் விதி. இந்தப் புலவியும் ஊடலும் தலைவற்கும் உண்டேனும், தலைவன் பரத்தமையால் தலைவி மாட்டே நிகழ்வதாகக் கூறுதல் புலனெறி வழக்கமாகும். தலைவி.பால் வேறுபாடு உண்டாகும்பொழுது தலைவன் அவள் சினத்தைத் தணிவித்தற்பொருட்டு நெருங்கி வந்து பணிதல் உண்டு. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடுங் கிழமை அவட்கிய லான" என்பது ஆசிரியர் இதற்குக் கூறும் விதியாகும். தலைவியும் தன் உள்ளத்தில் நிகழும் அன்பினை மறைத்துக் கொண்டு, வேறு பொருள் பயக்கும் சொற்களால் தன் பணிவை அவளுக்குக் காட்டுவாள். - அருள்முத் துறுத்த அன்புபொதி கிளவி - பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே' என்ற தொல்காப்பியரின் விதியால் இதை அறியலாம். புலவிக் காலத்தில் இவ்வாறு மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நிகழ்தல் முறையாகும் என்பது ஆசிரியரின் கருத்தாகும். மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய..!" 22. கற்பியல் - 24 23. டிெ - 38 24. டிெ - 19 25. டிெ - 20 26. ப்ொருளியல்-31