பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246 அகத்தினனக் கொள்கைகள்

நாளுக்கும் புறம்பாகிய பன்னிரண்டு நாள்' என்று பொருள் கூறுவர் தச்சினார்க்கினியர். மேலும் அவர் 'ஆப்பு புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளும் கருத்தங்கில் அது வயிற்றில் அழிதலும் மூன்றாம்நாள் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாதலும்பற்றி முந் நாளும் கூட்டமில்லை என்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத் தலிற் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தம் அகலும் அகல, வாய்க்கும் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று’ என்று கூறுவர். இறையனார் களவியலில் வருகின்ற இதேயடிக்கு அதன் உரையாசிரியர், பூப்புப் புறப்பட்ட நாள்முதல் பன்னிரு நாளும்' என்று பொருள் கூறுவர். மேலும் அவர் கூறுவன: "தலைவன் இவ்வகையாற் பூப்பு உணர்ந்து வாயில்களோடும் சென்று தலைமகளிடத்தானாய் முத்தாளும் சொற்கேட்கும் வழி உறைவானாவது முந்நாளும் சொற்கேட்கும் வழி உறைதற்குக் காரணம் என்னை எனின், தலைமகன் பரத்தையர் மாட்டானாக, முன்னின்ற பொறாமை உண்டன்றே, அது முந்நாளும் சொற் கேட்கும் வழி உறையவே நீங்கும். நீங்கிய பின்னைக் கூட்ட மாகவே கரு நின்றது மாட்சிமைப்படும். யுறையப்பெறும் குற்றம் என்னோ எனின், பூப்பு புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாவது நாளில் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நின்ற கரு குறுவாழ்க் கைத்தாம்; வாழினும் திருவின்றாம். அதனாற் கூடப்படாது என்ப' என்பது." இக்கருத்துகளை இன்று கருத்தடைபற்றிப் பேசப்பெறும் கருத்துகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்க." கூடு பருவம் (Safe period) இன்னும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப் பெறவில்லை. ஆயின், பண்டைத் தமிழர் இயற்கைக் கருத்தடை முறையைக் கண்டறிந்து வேண்டும்போது கருப்பெற்றும், வேண் ......முன்னாளும் கூடி டாதபோது கருத்தடை செய்தும் வாழ்ந்து வந்தனர் என்பதை யறிந்து இன்றைய தமிழர்கள் பெருமிதம் கொள்வார்களாக. இவ்வாறு வாயில்களால் உணர்த்தப்பெற்ற தலைவன் தன் இல்லத்தை அடைந்து தலைவியுடன் கூடிப் பள்ளியிடத்தனாய் இருக்கின்ற காலத்தில்தான் புலவி ஊடல் உணர்வுகள் நிகழும் 63. இறை. கள. நூற் 43 இன் உரை. - 64. டாக்டர் ந. சுப்புரெட்டியார்; இல்லறநெறி (தமிழ்ப் புத்தகாலயம், சென்னை - 5) என்ற நூலில் விரிவாக ஆராயப் பெற்றுள்ளது. -