பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைக்கிளை 277 விளம்பிநிற்கும் பிறவியாகும். பெண்னைப் போலவே ஆணும் நாணி தன் காதலுணர்வை அடக்கிக் கொள்ளுமேல் பின்னர் யார்தான் காதற்சிறையை உடைப்பவர்? யாவர்தாம் காதற்பயிரை வளர்க் கும் பொறுப்புடையவர்கள்? கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஒர்புறம் தழிஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப" (கொடும்புறம் - முதுகு, கலிங்கம் - புடவை; புதை - மூடி யிருந்தர் - என்ற அகப்பாடற் பகுதியால் திருமண நாளில் கோடிப் புடவைக்குள் தன் உடலை வளைத்து முகம் மறைத்துக் கிடந்த காதலியைப் புறம் தழுவித் தலைவன் முகமறைவை எடுத்தான் என்று நல்லாவூர்க் சிழார் ஆடவனது நீர்மையை, காதலில் அவனது முதல் முயற்சியை, எடுத்துக்காட்டுவர். ஆகவே, ஒருபுடைக் காமம் ஆகிய அகத்திணைக் கைக்கிளைக்கண் ஆண்பால் ஒன்றே இடம் பெறுதல் இயல்பும் தமிழ்ச் சமுதாய முறையுமாகும் என்பது தெளியப்படும்: o f 'காமஞ்சாலா இளமையோள் என்பதற்கு காமக் குறிப்பில்லா பேதைச் சிறுமி எனத் தவறாகப் பொருள் கண்டதால் தமிழ்ச் சமுதாயத்தில் குழந்தைமணம் இருந்தது போலும் என்று சிலரைத் தவறாக ஊகிக்கவும் இடந்தந்தது இங்ஙனம் ஒர் இளைஞன் பேதைப் பருவப் பெண்ணைக் காதலிப்பதும் அவளுடைய பெற்றோர் அவன் காதலை ஏற்று மகளைப் பருவம் அடையா முன்னரே மணம் புரிவது மாகிய ஒரு நெறி நடைமுறையில் இருந்திருப்பின் காமஞ்சாலா இளமையோள் வயின்' என்ற நூற். பாவில் குறிப்பிட்டுள்ள துன்பங்களையெல்லாம் அவ்விளைஞன் அநுபவித்திருக்க வேண்டா. பேதைக்காதல் தமிழ்ச் சசமுதாயத்தில் வழக்கிலிருந்திருக்குமேல் தொல்காப்பியர் கூறும் கைக்கிளைத் தன்மைக்கு அது பொருந்தி வாராமை அறியத் தக்கது. இத்தகைய மண நெறி உண்மையாக நிலவியிருப்பின் ஆசிரியர் தொல் காப்பியனாரும் துறை பல வகுத்துப் பேதைப்பெண்னை வரையும் வரை முறையாக மொழிந்து சென்றிருப்பர். பேதையைக் காதலித்தல், அவள் பருவம் எய்தும்வரை காத்திருத்தல், காமம் 15. அகம்-86 16. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி-பக் 15