பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெருந்தினை 293 முதுமைக்கு வேண்டிய சேமிப்பை இளமையிலேயே ஈட்டித் தொகுத்து எய்ப்பினில் வைப்பாக்க வேண்டும். எனவே, இளமைப் பருவம் இத்தகைய சவாலை ஏற்க வேண்டிய பருவம் ஆகும் என்ன செய்வான் இளைய நம்பி? கார்காலமும் கூதிர் காலமும் இன்பம் துய்த்தற்கு ஏற்றப் பருவங்களாகும். ஆகவே, அப் பருவங்களில் கூடி வாழ்தலையும் ஏனைய பருவங்களில் பொருள் தேடுதலையும் மேற்கொள்ள வேண்டும்.இதனால் கூடுதலும் பிரிதலும், பிரிதலும் கூடுதலுமாசிய ஒர் அளவு பட்ட வாழ்க்கை நெறியைக் கடைப் பிடிக்க வேண்டியது ஒரு கடமையாக அமைகின்றது. இவ்விடத்தில் இன்னொரு செய்தியையும் நினைதல்வேண்டும். ஆணுக்கு நீடித்த இளமை உண்டு முதுமையிலும் அவனுக்குக் காமச் செவ்வி உண்டு. பெண்ணின் இளமைப் பருவம் குறுகியது: ஐம்பது வயதிற்குள் காமஉணர்ச்சி மறைந்து விடும் பாங்குடையது. சூதக ஒய்வு (Menopause) ஏற்பட்ட பின்னர் இது அறவே இருக்காது இருவர் உடல்நிலைகளும்இயற்கையில்அங்ங்ணம் அமைந் துள்ளன. ஆகவே, பெண் இளமையை வீணாக்காது காமப் பயன் கொள்ள விரும்புவது இயல்பு. கால எல்லைக்கு உட்பட்ட காமத்தை இனி தேட வேண்டிய, தேடிக் கொள்ளக் கூடிய பொருளுக்காகப் பணயம் வைக்க விரும்பாள். எம்மையும் பொருளாக மதித் தீத்தை' என்று கலித் தொகைத் தலைவி கூறுவது இதனைவலியுறுத்தும். இன்னொரு தலைவியோ, உடுப் பதற்கு ஆடையில்லை; உள்ளது ஒன்றேயாயினும் அதனை இரு துண்டாக்சி உடுத்திக் கொள்வோம். வாட்டும் வறுமையிலும் கூட்டு வாழ்க்கையே வாழ்க்கை. கழிந்த இளமை எத்துணைச் செல்வம் கிடைப்பினும் திரும்ப வருமா? என்கின்றாள். ஒரோஒகை தம்முள் தழிஇ ஒரோஒகை ஒன்றன்கூ ருடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு." (ஓரோஒகை - ஒரொவொரு கைகளாலே; தழிஇ - தழுவிக் கொண்டு : ஒரோஒகை - ஒரோ வொருகைகளாலே; கூறு-பகுதி: தரற்கு - மீண்டு வருதற்கு! - 19. கவி-14 20. டிெ-18