பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 அகத்திணைக்கொள்கைகள் கற்பு நெறியில் கொண்டு செலுத்தினான். அப்பெரு முயற்சியில் அவன் நாண் அகன்றது; அவன் காதல் தொடர்பினை ஊர் அறிந்தது; இம்முறையினால் இசையாத பெற்றோரும் இசைய வேண்டியதாயிற்று. இவை எல்லாம் தலைவனது மிகு செயல் ஆதலின் பெருந்திணையாயிற்று. இங்குப் பெற்றோர் ஒவ்வாமை யைக் காண்கின்றோமேயன்றி நம்பி நங்கையின் ஒவ்வாமையைக் காணவில்லை. பெற்றோர் ஒப்புதல் தராவிடிலும் காதல் மாந்தர் கள் அகம் ஒத்த உள்ளப் புணர்ச்சியராதலின், இப்பெருந்தினை அகத்திணை யின் பாற் பட்டது. களவை நாணின்றி வெளிப் படுத்திக் கற்பு நிலைக்குக் கொணரப்பெற்றதனால், ஐந்திணை ஆகாமல் பெருத்தினை ஆயிற் று. (ஆ) இளமைதீன் திறம்: இல்வாழ்க்கையில் ஈடுபட்ட பின்னர் நம்பி நங்கையருக்கு இல்லறப் பொறுப்பு வந்து சேரும். அகலாது அணைந்து இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருத்தல் என்பது இயலாத செயல். குடும்ப வாழ்க்கை நடைபெறப் பொருள் வேண்டும். பொருளிட்டத்தில் நம்பியும் நங்கையும் பிரிந்திருக்கும் நிலை வந்து சேர்கின்றது. செல்வம் தேடும்பொருட்டு இளமை இன்பத்தை இழத்தல் கூடாது. இளமைப் பருவம் ஆற்றல் உடையது; வனப்பிற்கும் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் ஏற்ற பருவம் இது. இப் பருவத்தை இன்பமின்றி வீணாகக் கழித்தல் இல் வாழ்க்கை நடத்தும் நம்பி நங்கையர்க்கு அறம் ஆகாது: அறிவு மாகாது. இயன்றவரை இணைந்து வாழ்தலே சிறப்பாகும்; அதுவே இல்லற ஒழுக்கமும் ஆகும். இளமை சிறக்கவேண்டுமாயின் செல்வம் வேண்டும். வறியவன் இளமை இல்வாழ்க்கைக்கு வாட்டம் தரும்: இல்லற வேரை அரித்துவிடும் - - புணரிற் புணராது பொருளே பொருள் வயிற் பிரிவிற் புணராது புணர்வே" என்கின்றார் நற்றிணைப் புலவர் ஒருவர். இளமைக் காலத்தில்தான் இன்பத்தை நன்கு துய்க்க முடியும். உலைவின்றித் தாழாது உளுந்நிப் பொருளையும் சட்ட முடியும் இன்பமோ இளமைக்கு உரியது; செல்வமோ இளமைக்கும் வேண்டும், முதுமைக்கும் வேண்டும். முதுமை இன்பத்திற்கும் உழைப்பிற்கும் இடங் கொடததால், இளமையிலேயே இன்பத்தையும் துய்த்து HSAAAAASA SAAAAS AAAAA MS 18. தற்-16.