பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


308 அகத்திணைக் கொள்கைகள் (மள்ளர் - போர் மறவர் குழிஇய-குழுவிய, கூடிய, নয়ন சேரிவிழா, மான் தக்கோன் - தலைவன்: ஈர் - அறுத்தி யற்றிய நெகிழ்த்த கழலும் படி செய்த பீடு - பெருமை; குரிசில் - தலைவன்) என்று களவுத் தலைவி புலம்புகின்றாள். இங்குத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்தே புறப்பட்டுச் சென்று விட்டாள். இத்தலை, ஈண்டு எண்ணம் சொல் அளவில் அமையாது செயலிலும் ஈடுபட்டு விட்டாது. இதுவே மிக்க காமத்து மிடல் எனப்படும். இப்பாடலை இது காறும் ஐந்திணைக் களவுத் துறையாகக் கருதி வந்தது பிழை, பெரும் பிழை. நாண் கடந்த செயலால் களவுத் தலைவி பெருந் திணைத் தலைவியாகின்றாள். களவிலாயினும் கற்பிலாயினும் நாண் கடக்கும்செயல் பெருந்திணையாகும் என்பது அறியத்தக்கது. ஆடுகளமகள் காதலனை ஒடி ஆடித் தேடிய செயல் நுவலப்படும் இப்பாடல் பெருந்திணைக்கு இலக்கியமாகிறது. திருமணமாகிய தலைவியரும் தம் கணவன்மார் இருக்கும் இடம் தேடிப் புறப்பட்ட செய்திகளும் சங்க இலக்கியத்தில் உள்ளன. அன்புடைத் தலைவி யின் காதல்கள் நாணிறக்கும்போது பெருந்திணையாகின்றன. நாணழிவு கற்பழிவு ஆகாது. நாண் விட்டேனும் கற்பைக் காப்பது தமிழியம். இப் பெருந்திணைத் தன்மைகளை, உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர்க் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனக் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் சிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.' என்ற நூற்பாவில் காணலாம். இந்நூற்பாவினையும் ஏறிய மடற்றிறம்" என்ற நூற்பாவின் பிற்பகுதியினையும் இணைத்துச் சிந்திப்பின் தெளிவு பிறக்கும். காமக் கிழவன் உள்வழிப் படுதல்: என்பதும், மிக்க காமத்து மிடல் என்பதும் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்பதும் ஒன்றேயாகும். நாணைக்காட்டிலும் கற்புச் சிறந்தது என்று நெறி தெளிந்த பெண்கள் கற்புக் காவலின் 54. களவியல் - 123