பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


320 அகத்திணைக் கொள்கைகள் இதில் 'உலகத்தைப் பாதுகாப்பவன் போன்ற வலிமையை யுடையவன்; அறிஞர்வாய்க் கேட்டு மெய்ப்பொருளை அறிந்தவன் போல் நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன்; வறியோரின் நல்குரவினைக் கொடையால் போக்கும் வலியன்' என்று கூறுதலைக் காண்க. மணம் புணர்ந்த பின் தலைவி தலைவனைக் கணவன் என்ற முறையிலன்றித் தன்னைப் பெற்றவர்கள் நிலையில் வைத்துப் போற்றுவதையும் காணலாம். ..................... அவர் நமக்(கு) அன்னையும் அத்தனும் அல்லரோ? தோழி!' (அத்தன்-தந்தை! என்று குறுந்தொகைப் புலவரின் கூற்று இதனை வலியுறுத்தும், எனவே, தலைவியின் நலனும் மகிழ்வும் தலைவனைப் பொறுத்தே உள்ளன என்பது அறியப்பெறும். பண்டைக் காலத்தில் தமிழ் மக்கள் தம் முன்னோர் திரட்டிய பொருளைக் கொண்டு வாழும் இயல்பினர் அல்லர். முன்னோரால் ஈட்டிவைத்த பொருள்கொண்டு இல்லறம் நடத்துதல் முறையன்று என்பது பண்டையோர் கொள்கை' இதனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ, உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படா அர் இல்லோர் வாழ்க்கை இரவினினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர்”... ... ... ... ... ... ... (உள்ளது-முன்னோர் தேடிய பொருள்; சிதைப்போர்-செல வழிப் போர் உளர்-செல்வர் இல்லோர்-தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார்; இரவு-யாசித்தல்; சொல்லிய வன்ன்ம-சொன்ன ஆண்மைத் தன்மை) என்று கூறுவர். பொருள் வயிற் பிரிந்த தலைமகனைப்பற்றித் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்தது இப்பாடல். இந்தக் குறிக்கோளைக் கொண்டே பண்டையில் ஆடவர் பொருளிட்டப் பிரிவர். தலைமகன் எத்தகைய காதல் கொண்டவனாயினும் தவறான வழியில் அதனைத் துய்ப்பதனை விரும்பான். 29. குறுந் - 93. - இறையனார் களவியல்-35இன் உரை: திருக்கோவைசெய். 332 இன் உரை. 31 குறுந்-283. -