பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-25 தலைமக்களுடன் தொடர்புடையோர் அகத்திணை உலகில் ஏதோ ஒருவகையில் தலைமக்களுடன் தொடர்புடைய மாந்தர்கள் ஒன்பதின்மர் காணப்பெருகின்றனர். அவர்கள் கண்டோர், அறிவர், பாணன், பார்ப்பார், விறலியர். கூத்தர், இளையோர், விருந்தினர், தேர்ப்பாகன் என்போர். அகப்பொருள் பற்றிய இலக்கண இலக்கிய நூல்களில் இவர்கள் காட்டப்பெறும் திறத்தினை இந்த இயலில் காண்போம. () கண் டோர் இவர், களவுக் காலத்தில் தலைவியின் பெற்றோர் அவள் களவினை உணர்ந்து அவளை வேற்றவர்க்கு மணம் நிச்சயிக்கப் போகும்போதும், தலைவி தலைவனுடன் சென்று அவன் மனை யில் வரைந்து கொள்ளும் நோக்குடன் செல்லும்போதும் காட்டு வழியில் சந்திக்கும் மாந்தர். இவர் கூற்று நிகழும் இடங்களைப் 'பொழுது மாறும்' என்ற நூற்பாவில் தொகுத்துக் கூறுவர் தொல்காப்பியர். உடன்போக்கில் தலைவனும் தலைவியும் தமரின் நீங்கிச் சென்ற காலத்தில் அவர்களைத் தேடிச் சென்ற செவிலியிடம் இடைச் சுரத்துக் கண்டோர் கூறியதாக ஒரு குறுந் தொகைப் பாடல் உள்ளது. வில்லோன் காலன கழலே; தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர் யார்கொல் அளியர் தாமே யாரியர் 1. அகத்திணை-43 (இளம்)