பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/429

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் 411 அங்குத் தலை காட்டாது. மனை நிறைந்த வாழ்வாக இருக்கும்’ என்று கூறி மகிழ்கின்றான் தலைவன். இந்த நற்றிணைப் பாடலைத் தலைவற்குரிய கிளவிகளை யெல்லாம் தொகுத்துணர்த்தும், கரணத்தின் அமைந்து முடிந்த காலை' என்னும் நூற்பாவின்கண் நன்னெறிப் படரும் தென்னலப் பொருளினும் என்ற விதியை விளக்க எடுத்துக் காட்டினர் இளம்பூரண . நன்னெறியாவது, அறம் பொருள் இன்பம் வழுவாத நெறி. தலைமகன் சிறப்புத் தொன்று தொட்டு வருதலின் குடிநலத்தைத் தொன்னலம்' என்றார். இப்பாட வினுள் ஊடற் குறிப்பினளாகிய தலைவி மனை வாழ்க்கைத் தரும மாகிய விருந்து புறந்தருதல் விரும்பினளாகலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று. புலவி கூர்ந்தும் சிறு காலை அட்டில் புக்குச் செம்மையுற அடிசிலாக்குதலும் அவள் மாண்பினை உணர்த்துதல் உணர்தற்பாலது. இங்ங்ணம் தலைமகள் விருந்துடன் வருங்கால் தலைமகள் சினம் கொண்டு கண் சிவக்காது குறு முறுவல் கொண்ட முகத் தினளாக இருப்பதைக் கண்ட தலைமகனின் மகிழ்ச்சியை, புரவே யெதிர்ந்த நமக்கு விருந்துஇன்று போலஎன்றும் வரவே புணர்ந்தநம் மாதவம் வாழிய! வாணன் தஞ்சைக் குரவேய் கருமுகில் கொந்தள பாரக் குரும்பைக் கொங்கை அரவேய் நுடங்குஇடை யாள்விழி ஊர்சிவப் பாற்றுதற்கே" அன்ற தஞ்சைவாணன் கோவைச் செய்யுளிலும் கண்டு மகிழலாம். (ix). தேர்ப்பாகள் இவன் தலைமகனுடைய தேரோட்டி; தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் போதும், மீண்டும் தலைவன் தலைவியை நாடி 49. கற்பியல் - 5 (இளம்) 50. தஞ். கோ. 396