பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-5 நிலங்களும் ஒழுக்கங்களும் ஐவகை ஒழுக்கங்களுக்கும் ஐந்து நிலங்கள் உரியவை என்றும் அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்றும் முன் னர்க் கண்டோம்; இவற்றிற்கு இப்பெயர்கள் ஏற்பட்டதன் காரணத்தையும் ஆய்ந்து காண்போம். இப் பெயர்கள் மரம் அல்லது பூக்களின் சிறப்புக்கு உரியவை என்பதும், முல்லை முதலியவற்றின் மிகுதி அல்லது சிறப்பு பற்றியே இந்நிலங்கட்கு இப்பெயர்கள் வழங்கலாயின என்பதும் பண்டையோர் கொள்கை. இளம்பூரணரும் மாயோன் மேய' என்ற நூற்பாவின் உரையில் குறிஞ்சி முதலிய நிலங்கள் குறியிட்டாளப் பட்டன என்று கூறுவர். அவர் கூறுவது: 'முல்லை குறிஞ்சி என்பன இடு குறியோ காரணங் குறியோ எனின், ஏகதேசம் காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும். என்னை காரணம் எனின்: 'நெல்லொடு நாழி கொண்ட, நறுவி முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்." என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆக லானும், கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.” என்றவழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூ சிறந்தது ஆகலானும், 1. அகத்திணை.5. 2. முல்லைப். அடி (8-10) 3. குறுந்-3