பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/443

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைப் பாடல்கள் 425 வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே. . என்பது செவிலிக்குக் கண்டோர் கூறுவது. பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.'" என்று முக்கோர் பகவர் இடைச்சுரத்தில் கண்ட செவிலியிடம் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைய பதின்மரும்’ தலைமகனும் தலைமகளுமாகிய இருவரோடும் இடமும் காலமும் நோக்கி உரை நிகழ்த்தும் மரபுகளையெல்லாம் தொல்காப்பியர் நன்கு விளக்குவர். ஆனால், அவர் பிற்காலத்து அகப்பொருள் இலக்கணம்போல் இக்கூற்றுகளை துறை வரிசைப்படுத்தி மொழிய வில்லை என்பது அறியத் தக்கது தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி, தோழி முதலியோர் கிளவி நிகழ்த்தும் இடங்களே தொகுக்கப் பெற்றுள்ளன. இங்ங்ணம் தனித்தனி வைத்துக் காட்டப்பெற்ற கூற்றுகளைக் கோவைக் கிளவிகள் போலத் துறைப் படுத்திக் கூறுவதற்கு ஆசிரியர் காலத்து வழங்கிய அகப் பொருள் முறை வைப்பு இன்னதென்பதை விளக்கும் இலக்கியம் கிடைக்கவில்லை. எனவே, அவற்றைத் தொல்காப்பியர் கூறும் முறைப்படி விளக்குதற்குத் தடையாகின்றது. கடைச்சங்க நாளில் அகத்திணைபற்றி எழுந்த நற்றிணை, நல்ல குறுந்தொகை முதலிய தொகை நூல்கள் பிற்காலத்துக் கோவை நூல்களில் கண்ட துறைகளையே பெரும்பான்மை கூறினும், அவை கோவை போலக் காட்சி முதலாகத் தொடங்கிப் பரத்தைப் பிரிவு இறுதி யாக வைத்துக் கூறவில்லை. அவை யாவும் குறிஞ்சி பாலை என்னும் திணை முறைப்படியே வைத்து ஒதுகின்றன. எனவே: அவற்றில் ஒரு துறைக்கு மற்றொரு துறை தொடர்பின்றியே காணப்பெறும். இங்ஙனம் தொல்காப்பியனார் அவ்வலர் சுந்து 18. குறுந் 7 19. கலி - 9 அடி (13-15) 20. பதின்மாவார் : பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, பாணன், கூத்தன், விறலி, பரத்தை அறிவர், கண்டோர் என்போர்(இவர்உரையாடும் திறம் இந்நூலில் பிறிதோரி டத்தில்விளக்கப்பெற்றுள்ளது.)