பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/473

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-29 உள்ளுறை உவமம் ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுட்களின் கருத்தைத் தெளிவுறக்காட்டற்குரிய உவமத்தை உள்ளுறை உவமம்', ஏனை யுவமம் என இரண்டாகப் பகுத்துக் கூறுவர். ஏனையுவமம் அகம் புறம் என்ற இருபொருள்களிலும் பொதுவாகப் பயின்று வருவது. இஃது உள்ளத்தால் ஆய்ந்துரை வேண்டாது சொல்லி யுள்ள சொற்களின் துணையானே உணரும் தன்மையது; இது செய்யுளில் பொருளினின்றும் தனியாக நிறுத்திக் கூறப்பெறும். உள்ளுறை உவமமோ அகப்பொருள் பாடல்கட்கே சிறப்பாக உரியது. இதனால்தான் தொல்காப்பியனார் உவமஇயலுள் இதன் இலக்கணம் கூறினாலும் அதற்கு முன்னதாகவே அகத் திணை இயலுள்ளும் இவ்வுவமையை விரித்தோதியுள்ளார். இவ்வுள்ளுறை உவமம் தலைவி தோழி முதலியோர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாக வேறு பொருள் படத் தொடுத்து அத்தொடர் தாம் கருதிய பொருட்கு உவமம்போல் அமைந்து அவ்வுவமத்திற்குப் பொருளாகத் தாம் கூறும் கருத் தினை கேட்கும் நுண்ணறிவுடையோர் உணர்ந்து கொள்ளும்படி வியத்தகு முறையில் அமைத்துக் கொண்ட உரையாடும் ஓர் உத்தி யாகும். அகப்பாடல்களில் பயின்று வரும் இதில் வெளிப்படை யாகத் தோன்றும் கருத்துகள் உள்ளே அடிப்படையாக உறைந்து கொண்டிருக்கும் கருத்துகளுக்கு உவமையாக வரும்படி அமைக்கப் பெற்றிருக்கும் சாதாரணமாக வெளிப்படை உவமமானால் அதில் உவமேயமும் இருக்கும்; உள்ளுறை உவமத்தில் உவமேயம் வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், உவமை போலக் கொண்டு இதற்கு ஒப்பான வேறு பொருளை நுண்ணுணர்வால் சிந்தித்து அறிந்து கொள்ள முடியும் ஆசிரியர் தொல்காப்பிய ன்ார் இதனை, - உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை யுவமம்' 1. அகத்திணை - 51|இளம்)