பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/488

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


470 அகத்திணைக் கொள்கைகள் அம்பு மாரி தொடுக்கின்றனர். அம்புபட்ட புண்ணின் வேதனை பொறுக்க மாட்டாது யானை கேட்போர் அச்சம் தருமாறு பேரொலியுடன் பிளிறுகின்றது. இவ்வொலி இடிமுழக்கம் போல் கேட்கின்றது. இத்தகைய நாட்டின் தலைவன் இவன். வெளிப்படையாகத் தோன்றும் இந்தக் கருத்தில் அடிப்படை யாகக் குறிப்பிடப்பெறும் கருத்து இது: இந்த உள்ளுறை உவமத்தில் யானை தலைவியாகவும், புலி காம நோயாகவும், வேடர் ஏதிலாட்டியராகவும் கொள்ளப்பெற்றுள்ளது. புவி பொருதலால் புண்பட்டு வருந்தும் யானை காமநோய் பொருதலால் வருத்தமுற்ற தலைவியாகவும், வேடர் யானையின் மருப்புப்போகக் கணை தொடுப்பது ஏதிலாட்டியர் தலைவியின் உயிருக்கே ஏதம் உண்டாகும்படி அலர் எடுத்ததாகவும், அம்பு பட்ட யானை பூசலிடுவது அலரைப் பொறாளாய தலைவி வருந்துவதாகவும், அப்பூசல் மலையில் சென்று மோதுதல் அவ்வருத்தச் செய்தி தலைவன் காதுக்கும் எட்டிவிட்டதாக்வும், அத்தகைய மலை நாடனாதலின் இன்னே வருகுவன் என்றும் கொள்ளப் பெறும். பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தில் திரும்பி வரவில்லை. அதனால் வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுகின்றாள்; தான் கேட்ட நன்னிமித்தம் கூறி தலைவியைத் தேற்றுவதாக அமைந்தது இப்பாடல். விரைவில் திரும்பித் தலைவியை மணந்து கொள்வான் என்பது தோழியின் குறிப்பு, (3) கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முனை இத் தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர.”* |கழுநீர் - குவளை மலர், கருந்தாள் - கரிய கால்: பழனம் - வயல், முனை இ - வெறுத்து; தண்டு - தடி; மள்ளரின் மள்ளரைப் போல; இயலி - செருக்கி நடந்து; துஞ்சும் - உறங்கும்) -- இந்த மருதத்திணைப்பாடலில் வெளிப்படையாகப் புலப்படும் கருத்து இது: குவளை மலரை மேய்ந்த கரிய கால்களையுடைய எருமை அயலிலுள்ள வயலில் படர்ந்த தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்துவிட்டுக் குன்றுபோல் குவிந்து 25. டிெ - 260