பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/490

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


472 அகத்திணைக் கொள்கைகள் நீர் மிக்க: பழனம் - வயல், இரிய - ஒட அம்தும்பு . அழகிய உள்துளை, பனிமலர் - குளிர்ந்த மலர்) 'சிவந்த கண்களையுடைய எருமை தனக்கு இருப்பிடமாகிய கொட்டிலைச் சேறாக்கிக் கொண்டு தளையையும் அறுத்துக் கொண்டு பழனத்திற்குக் காவலாக விளங்கிய வேலியைத் தன் கொம்பால் ஒடித்து, மீன்கள் பயந்து ஒடத் தாமரை சூழ்ந்த வள்ளையை மயக்கி, மலர்தலின்றி விளங்கும் தாமரையை அருந்தும் ஊர!” என்று அவனை விளிப்பதாக அமைந்துள்ளது மேற்கூறிய பாடற்பகுதி. இம் மருதத்திணைப் பாடலில் எருமை தலைவனுக்கும், கொட்டில் தலைவிக்கும், தளை நாணத்திற்கும், கோடு பாணனுக்கும், வேலி விறலிக்கும், மீன்கள் பரத்தையரின் தோழி மாருக்கும், வள்ளை பரத்தையரின் தாய்மார்க்கும், மலர்ச்சியின்றி வண்டொடு குவிந்த தாமரை அகமலர்ந்து ஏற்றுக் கொள்ளாத பரத்தையர்க்கும் உவமைகளாக நின்று தோழி கருதும் பொருளை உணர்த்துகின்றது. தலைவன் தன்னால் ஆதரிக்கப் பெற்ற தலைவியை வேறுபடுத்தி, தனக்குரிய நாணத்தையும் குலைத்துக் கொண்டு, பாணனைக் கருவியாகக்கொண்டு விறலியை அப்புறப்படுத்தி, பரத்தையருடன் உறையும் தோழிமார்களையும் எப்படியோ நாற்புறமும் சென்று நீங்கச் செய்து, அப்பரத்தையரின் தாய்மாரையும் மயக்கி அகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளாத பரத்தையரை நுகர்ந்தவன் அன்றோ என்று கூறாமல் கூறித் தலைவனை விளிப்பதை இந்த உவமையில் காண்கின்றோம். நாகரிகமான முறையில் குறிப்பாகச் செய்திகளை உணர்த்திக்குறிப்பாகத் தலைவனது புறத்தொழுக்கத்தைக் குத்திக்காட்டிக்கடிந்து வாயில் மறுக்கும் தோழியின் திறம் எண்ணி எண்ணி மகிழ் வதற்குரியது. (2) தலைவியின் களவொழுக்கம் அவளை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அவளது உடல் மெலிவும் சுணங்கு படர்ந்த உடல் மாற்றமும் அன்னையரின் உள்ளத்தைக் கவலச் செய்கின்றன. அவர்கள் உண்மையறியாது கலங்கித் தம் மகளுக்கு நேர்ந்த இவ் வேறுபாடு தெய்வத்தால் வந்ததெனக் கருதி வேலனைக்கொண்டு வெறியாட்டெடுக்க ஏற்பாடு செய்கின்றனர். இதனைக் காணும் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில் வரும் உள்ளுறை இது: