பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/553

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 537 முயல்கின்றாள் ஒர் இல்லற நங்கை (கலி-80). பல்வேறு அணிகலன் களைப் பூண்டு ஆடைவகைகளை அணிந்து நடைவண்டி தள்ளி வரும் அருமை மகனைப் பாலுண்ண அழைக்கின்றாள் மன்றொரு தலைவி. நுந்தைக்கு ஒருவாய், நின் வளர்ப்புத் தாய்மார்க்கு ஒரு வாய், நின் தாய்க்கு ஒருவாய் என்று சொல்லிச் சொல்லிப்பாலைப் பகுத்துரட்டுகின்றாள் (கலி-85), இங்ஙனம் மருதக் கலியில் தூய பெண்ணின் தாய்மையைக் காண முடிகின்றது; பரத்தைத் தலைவனுக்கு மகப்பற்று உண்டு எனவும், அப்பற்று குடும்பப் பற்றினைப் பெருக்கும் எனவும் தெளிகின்றோம். மருதக் கலி பல்வகை மாட்சியுடையது; தலைவியின் கற்பு மேம்பாட்டையும் அவளது ஊடற்கலையையும் காட்டி நிற்பது. சில பாடல்களில் தலைவன் மெய்யான பரத்தனாகக் காணப் பெறுகின்றான்; சிலவற்றில் பரத்தனாகக் கருதப்பெறுகின்றான். சில புலவிக் காட்சிகள் வள்ளுவர் புனைந்து காட்டும் புலவிக் காட்சிகளையொத்துள்ளன. ஆடவனுக்கு ஒரு மணவரம்பு இல்லாத தால் அவ்வரம்பு உடைய தலைவி கணவனைப் பல மனத்தனாகக் கருதுவாள்; அவனுக்கு முன்னர் வெளிப்படையாகவும் கூறுவாள். இதனைப் பொறுக்கலாற்றாத தலைவன், செய்யாத சொல்லிச் சினவுவ திங்கெவன் ஐயத்தால் என்னைக் கதியாதி திதின்மை தெய்வத்தால் கண்டீ தெளிக்கு. என்று தலைவியை வேண்டுகின்றான். (கலி-91) வந்தெ னைக்கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிற விக்கிரு மாதரைச் சிந்தை யாலும் தொடேனென்ற செவ்வரத் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்." |வைகல்வாய்-அந்நாளில் என்பது இராமன் சீதைக்கு வரங்கொடுத்த செய்தியைக் கூறும் இராமாயணக் குறிப்பு. இதனைக் கிடைத்தற்கரிய வரமாகப் போற்றுகின்றாள் சீதை. ஆடவன் மணவரம் பற்றவன் என்பது சமுதாய அமைப்பு. இருமனைவி என்னாது இருமாதர் என்பத னால் பரத்தை வழக்கியலை உளங்கொண்டு இராமன் வரம் நல்கி னான் என்று கொள்ளலாம். பகைவர் சிதைந்தோடுமாறு பொரேனாயின், . - 35. கம்ப. சுந்தர-சூளாமணி-34.