பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 அகத்திணைக் கொள்கைகள் இணைத்து வைக்கும் பாலம்போல் தனயன் அமைகின்றான். பகல் முழுதும் வேறிடத்துத் தங்கிய பரத்தனே என்று தலைவி சீற்றங் கொள்ளுங்கால் தலைவன் யாதும் மறுமொழி பகராது மகனைத் தழுவிக்கொண்டு துளங்குவது போலக் கிடப்பான் (கலி-79). மகன் அருகில் கெல்லற்க: எதிரில் நில்லற்க’ என்று தலைவி அவனுடன் மாறுபட்டிருக்கும்போது "மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வோம்’ என்று சொல்லிக் கொண்டு தாவா விருப்பொடு கன்று இருக்கும் இடம் செல்லும் ஆபோல் மகன் இருக்குமிடம் பாய்வான் (கலி-81). மகன் கைபுனை வேழ வண்டியை இயக்கி விளையாடும் நிலையில், மகனுக்கு அறம் உரைப்பவள்போல் தலைவி அவன் தந்தையை இடித்து உரைக்கின்றாள். சில நல்ல பண்புகளில் தந்தையை யொப்பாய்; சில தீய பண்புகளில் அவனை ஒவ்வாதே என்று கூறிப் பொழுது போக்குகின்றாள். இந்நிலையில் தலைவியின் பின்புறமாகத் தலைவன் வந்து நிற்கின்றான். மகன் அவனைப் பார்த்து நகுகின்றான். தலைவி திரும்பிப் பார்க்கத் தலைவன் நிற்பதைக் காண்கின்றாள். இவனை என்னிடம் தருக" என்கின்றான் தலைவன். தாயின் பிடியை விலக்கிக் கொண்டு தந்தையின் மார்பில் பாய்கின்றான் குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்கு தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா அன்பிவி பெற்ற மகன்.”* (குன்ற-மலையிடத்து உறுகின்ற; இறுவரை-அடிவரை; கோண்மா-சிங்கம்; இவர்ந்தாங்கு-பாய்ந்தாற் போல்; வியன் மார்பு-அகன்ற மார்பு: அன்பிலி-அன்பு இல்லா தவன்.) என்று பெருமித உவமை கூறுகின்றாள். இதனால் ஊடல் தீர்கின் றாள் என்பது பெறப்படுகின்றது. தலைமகன் பரத்தை வீட்டிலிருக்கும்போது தலைவிக்கு மகன் ஆறுதல் அழிக்கும் பொருளாக அமைகின்றான். கிண்கிணி ஆரவாரிக்க அசைந்தசைந்து நடக்கும் தளர்ந்த நடையைக் கண்டும், பார்வையால் ஈர்க்கின்ற அழகினையுடைய அவன் அத்தத்தா என்று கூறும் தேமொழியைக் கேட்டும், "திங்கட் குழவி வருக என அவனுக்கு அம்புலி காட்டியும் ஆறுதல் அடைய 34. கலி-85.