பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/561

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 545 கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர 65 (கலித்த - தழைத்த; சுரும்பு - வண்டு) பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறுஉம் ஊர (63) என்ற பாடற் பகுதிகளில் இந்த அருமைப்பாட்டைக் கண்டு மகிழ @)fTİ D. (vil), அம்மூவனார் இவர் 127 அகப்பாடல்களின் ஆசிரியர். அகத்திணைப் பாட் டெண்ணிக்கையில் கபிலருக்கு அடுத்தவராக நிற்பவர். புறத்திணை பாடாப் புலவர். இவர் பாடல்கள் அகநானூறு (6), நற்றிணை 10), குறுந்தொகை (11), ஐங்குறுநூறு (100) என்ற நான்கு தொகை நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சிக் கபிலன் என்பது போல இவர் நெய்தல் அம்மூவன் எனச் சிறப்பிக்கப் பெறுவர். இவர்தம் பாடல்கள் நெய்தல் திணைக் கருப்பொருள் களை நுனித்தாய்ந்து ஆட்சி செய்திருத்தலைச் செவ்விதின் புலப் படுத்தும். அம்மூவனார் நெய்தல் திணைக்குரிய இரங்கற் பொருளைப் பாட வேண்டியிருப்பினும், புணர்தல் இருத்தல் ஊடல் என்ற பிற உரிப் பொருள்களையும் நெய்தற் சூழ்நிலையில் வைத்துப் பாடியுள்ளார். இது இவர்தம் தனிச் சிறப்பு. பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் 'நல்லன் என்றி யாயின் பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.* என்பது கணவனது பரத்தொழுக்கம் பற்றித் தலைவி புலந்து கூறும் பாடலாகும். இது நெய்தல் நிலத்து ஊடல் உரிப்பொருள் குறித்தது. இருப்பினும் கடற்கரை, காக்கை, இருங்கழி, துறைவன் என இப்பாடலில் நெய்தல் திணைச் சூழலை அமைத்திருத்தல் 49, ஜங். 170 அ-35