பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 அகத்திணைக் கொள்கைகள் வாழி யாதன், வாழி அவினி நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோளே யாயே." என்பது தோழி கூற்று. நல்வாழ்வுக்குத் திரும்பிய தலைவன் தோழியை நோக்கி ஒருநாள் நான் பரத்தனாய்த் திரிந்த காலத்து நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தீர்கள்?' என்று கேட்டமைக்குத் தோழி கூறிய மறுமொழி இது. அத்துடன் விட்டாளா? நனைய காஞ்சிச் சினையயாமே சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே." என்று ஆயம் நினைத்தவற்றையும் வெளியிடுகின்றாள். தலைவன் நிலை திரிந்த காலத்தும் தலைவி தன் கடமை நிலை, எண்ண நிலை திரிதல் கூடாது என்பது கவிஞரின் உறுதிப்பாடு. தாய்போற் கழறித் தழிஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப." என்பது தலைவிக்குத் தொல்காப்பியர் கூறும் இலக்கணம் அன்றோ? உள்ளுறை என்னும் இலக்கியக் கருவி மருதத்திணை பாடு வோர்க்கு மிகவும் இன்றியமையாதது. ஐம்பது பாடல்கட்கு மேலாக உள்ளுறை அமைத்துப் பாடியவர் ஒரம்போகியார்; இலக்கிய அழகை மிகுவிக்கும் இக் கருவியைக் கையாளும் திறனால் இயற்கை வனப்பு, உவமைத் தன்மை, நாகரிகப் பண்பு, புலமைக் கூர்மை முதலியவை இவர் பாடல்களில் பளிச்சிட்டுக் காட்டும். அடிகளால் குறைவுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்களில் உள்ளுறை அமைப்பது அருமை யாகும். ஆனால் ஓரம்போகியார் இதனை அற்புதமாக அமைத்துக் காட்டுகின்றார். பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு (4) 46. டிெ - 1 47. டிெ - 1 48. கற்பியல் . 32