பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/585

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 569 அருகில் வந்து ஓவியம் வாளாது நிற்பதுபோல நிற்கின்றாள் ஆகத் தடக்கிய புதல்வனுடன். கண்ணில் நீர் குளமாகி அவள் பார்வையை நடுங்கச் செய்கின்றது. பரல்முரம் பாகிய பயமில் கானம் - இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா(று) அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்னவாக எண்னுநள் போல முன்னம் காட்டி முகத்தில் உரையா (பால்-பருக்கைக் கற்கள்: முரம்பு மேட்டு நிலம்; இறப்பகடந்து செல்ல; அறத்தாறு-அறநெறி; தொன்றுபடுகிளவிஇயற்கைப் புணர்ச்சியின்போது சொன்ன சொல்; அன்னவாக சொல்லிய அளவில் கழிக; முன்னம்-குறிப்பு) பிரிவிற்குத் தான் உடன் படாமையைக் குறிப்பால் புலப்படுத்து வாள்போல் பெருமூச்சு விடுகின்றாள். அந்த வெப்பத்தால் புதல்வனின் புல்லிய தலையிலணிந்திருந்த செங்கழுநீர் மாலை பவளம் போன்ற தன்னுருவினை இழிந்து பொலிவற்றதாகி விடுகின்றது. இத்தோற்றத்தைக் காண்கின்றான் தலைவன். 'நாம் அண்மையில் இருக்கவும் இவ்வாறு வருந்தும் இயல் பினளாகிய இவள் நாம் பிரிவோமாயின் உயிர் வாழ்ந்திராள்' என்று கருதிச் செலவழுங்குகின்றான். செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்." |அழுங்கல்-தவிர்தல்: வன்புறை-வற்புறுத்தல்) என்ற தொல்காப்பிய விதிக்கு இலக்கியமாகின்றான். இப்பாடலி லுள்ள பாலை ஒவியம் பாங்காக அமைந்திருப்பது படித்து அதுபவிக்கத் தக்கது. சங்கப் பனுவலில் உடன்போக்குத் துறைக்கண் அரிய ஒரு புதுச் செய்தியைப் பெருங்கடுங்கோ தருகின்றார். புறவணி கொண்ட தநாறு கடத்திடைக் கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாதி 81. கற்பியல்-44