பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/604

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


588 அகத்திணைக் கொள்கைகள் கண்தர வந்த காம ஒள்ளெரி என்புற நலியினும் அவரொடு பேணிச் சென்று நாம் முயங்கற் கருங்காட் சியமே; வந்து)அஞர் களைதலை அவர்ஆற் றலரே உய்ந்தனர் விடாஅர்; பிறிந்துஇடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியி னல்லது களைவோர் இலையான் உற்ற நோயே." (ஒள்எரி - ஒள்ளிய தீ; என்பு:உற என்பைப் பொருந்துபடி: நலியினும் - வருத்தினும்; பேணி - விரும்பி; அருங்காட் சியம் - அரியேமாயினம்; அஞர் - துன்பம்; உற்ற-அடைந்த; உய்த்தல் - செலுத்துதல்; களையார் - நீக்கார்; விளி வாங்கு அழியும் வழி) ஒருவனோடு ஒருத்தி கொள்ளும் தொடர்பிற்கு முதற்காரணம் கண், ஆதலின் காதல் நோயைக் கண்தர வந்த காமம்’ என்றார். இக்காதல் நோய் கண்டாரின் உள்ளுறுப்புகளையும் உடலையும் உருக்கி அழிக்கும் இயல்பாதலின் இக்காதல் நோயை காம ஒள் எரி என்றும் கூறினார். இக் காமநோயைக் களைவார் எவரு மின்றி விடப்பெற்ற நிலையினை விளக்க ஒர் அழகிய உவமையை எடுத்தாள்கின்றார் கவிஞர். கோழிச்சண்டை என்பது, கோழிகளைச் சண்டையிட விட்டு மக்கள் பெருங் கூட்டமாகக் கூடி நின்று கண்டு களிப்பர். போருக் கென்றே வளர்க்கப்பெறும் கோழிகளைத் தவிர குப்பைகளை மேய்ந்து வரும் கோழிகளும் போரிடும்; ஆனால் அவற்றின் போர் கண்டு மகிழ்பவரும் இலர்; அப்போரினை இடைநின்று தடுப்பாரும் இலர். போரை அவை தாமே தொடங்கும். காண்பாரைப் பெறாமலே போரிடும்; அவை தாமே ஒய்ந்தும் அடங்கும். இக் கோழிப் போரினை உணர்ந்த கவிஞர் தலைமகள் கொண்ட காம நோய் களைவார் எவரையும் பெறாமல் விடப் பெற்ற நிலையினை விளக்க, பிறரால் விடப் பெறாமல், கண்டு மகிழ்வாரையும் பெறாமல், இடையிட்டு நீக்குவாரும் இல்லாமல், தாமே தொடங்கி, தனியிடத்தே போரிட்டு, தாமே ஒய்ந்து ஒழியும் குப்பைக் கோழிகளின் போரை உவமையாகக்கொண்டார். 9. குறுந் 305