பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/603

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவமையால் பெயர் பெற்றோர் 587 (மனைவியைக்) கரும்பென்றார் என்று உரை கூறுவர்". அடிக் கரும்பு மிக்க சுவையுடையது. இதனை நன்கு அறிந்த தலைமகன் தன் மனைவியின் வாலெயிறு ஊறும் நீருக்கு கரும்பின் அடிப் பகுதியின்-கால் எறிகடிகையின்-மிகச்சுவையினைத் தரும் நீருக்கு உவமை கூறுகின்றான். இவ்வாறு உவமை காட்டிய சிறப்பால் உவமையமைத்த கவிஞரின் இயற்பெயரை மறந்து காலெறி கடிகையார் என்ற அவர் கூறிய உவமையினையே அவருக்குப் பெயராக வைத்துப் போற்றுவாராயினர் அவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள். (vi). குப்பைக் கோழியார் - மங்கள குணங்கள் நிறைந்த மகள் ஒருந்தி பெற்றோரும் உற்றோரும் அறியாமல் ஆண்மகன் ஒருவனிடம் காதல் உறவு கொண்டிருந்தாள். பருவம் எய்திய இவளைத் தாய் இற்செறிப்பு செய்தாள். இதனால் இருவரும் ஒருவரை யொருவர் சந்திக்க இயலாது செயலற்றவர்களாயினர். தன்னிலையைத் தாய்க்கு உணர்த்துமாறு தோழியை வெளிப்படையாகக் கேட்டால் அவள் பெண்மைக்குச் சால்பன்று. ஆகவே, தான் கூறுவனவற்றைக் கேட்கும் அளவில் தோழிநிற்கும் காலம் நோக்கி எங்கோ பார்த்துப் பேசுவதுபோல் கூறுவாளாயினள்: t - "அவர்பால் நான் கொண்டுள்ள காதலோ பெரிது; அவரைக் காண இயலா நிலை இப்போது வந்துற்றது. இதனால் உண்டான் நோய் என் உடலையும் அழிக்கத் தொடங்கிவிட்டது. என் உடல் அழிவதாயினும் அவரைச் சென்று அடைதல் என்னால் இயலாது; அவர் என்பால் வந்து என் துயர் துடைப்பதும் அவரால் இயலாது. இந்நிலையில் என்னை நலியும் இக்காதல் நோய் தன் முழு ஆற்ற லையும் காட்டி என்னை வருத்தட்டும்; மேலும் அழிக்க ஒன்றும் இல்லாத நிலையில் தன் ஆற்றலை இழந்து தானே அழியட்டும். இடைப் புகுந்து அதனை அழிப்பார் எவரும் இலரே என் செய் வேன்' எனத் தன் வருத்தம் தோன்றுமாறு பேசுகின்றாள். தலைவியின் குறிப்பினை அறிந்த அவள் ஆருயிர்த்தோழி அறத் தொடு நிற்பதே என் கடன்' என்று துணிகின்றாள். இந்த அழகிய நிகழ்ச்சியை விளக்கும் குறுந்தொகைச் சொல்லோவியம்: 8. சீவக சிந், 2453 பாடலின் உரை.