பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 - அகத்திணைக் கொள்கைகள் (xi). மீனெறி தூண்டிலார் தலைவன் ஒருவனும் தலைவி யொருத்தியும் களவொழுக் கத்தில் ஒழுகி வருகின்றனர். தலைவன் வரையாது களவொழுக் கத்தை நீட்டிக்கின்றான். இதனால் தலைவன் இரவுக்குறி வரும் ஏதத்தை எண்ணி அஞ்சுகின்றாள் தலைவி. இதனால் அவள் உடல் நலம்குன்றுகின்றது. நலங் குன்றுவது ஏன்?” என்று தோழி வினவு கின்றாள். தோழிக்குத் தலைவி, தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவள் வரைந்து கொண்டாலன்றி, அதனைப் பெறேன்' என்கின்றாள். இக் கருத்து அடங்கிய குறுந் தொகைப் பாடல்: யானே, ஈண்டை யேனே; என்நலனே ஏனல் காவலர் கவனொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு ஆண்டொழிந் தன்றே.' (ஈண்டையேன் - இவ்விடத்திலுள்ளேன்; ஏனல் - தினைப் புனம்; வெரீஇ - அஞ்சி; கானம் - காடு; கழை மூங்கில் : மீன் எறி-மீனைக் கவர்ந்துகொண்ட ஆண்டு-அவ்விடத்து; ஒழிந்தன்று - நீங்கியது) இதில் தலைமகனுடைய காட்டைப் பற்றிக் கூறுங்கால், அது யானைகள் நிறைந்தது. மூங்கிலும் அங்கே நிறைய உண்டு. யானைகள் மூங்கில்களைப் பற்றி வளைத்து அவற்றின் தழைகளை உண்ணும். தினைப் புனக் காவலர் வீசும் கவண் கல்லின் ஒலி கேட்டு மூங்கில்களைக் கைவிட்டு ஒடும். அந்த மூங்கில்கள் விண்ணோக்கிப் பாயும்' என்பர். இங்ஙனம் மூங்கில்கள் பாய்வதை ஒர் அழகிய உவமையால் விளக்குவர் கவிஞர். தூண்டில் கொண்டு மீன் பிடிப்போன் தூண்டிலில் மீன் சிக்கியவுடன் அதனை விரைந்து மேலே தூக்குவன்: இந்நிலையில் அத்துாண்டிற்கோல் விரைவாக மேலெழும். யானையின் பிடியினின்றும் விடுபட்ட மூங்கில் விண் நோக்கி விரைவதற்கு மீனெறி தூண்டில் விரைவாக மேலெழு வதை உவமை கூறியுள்ளார். இந்த அரிய உவமையால் கவிஞரும் மீனெறி துண்டிலார் என்ற சிறப்புப் பெயரால் வழங்கப் பெறுவா ராயினர். - 14. குறுந் 54.