பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/631

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 615 'அருமையான மகனே, அந்த நாளில்-நீ பிறப்பதற்கு முன்னர், நானும் நின்தந்தையும் (காதலரும்) பூவும் மணமும் போலசொல்லும் பொருளுமாக-உடம்பும் உயிரும் என்ன - கரும்பும் அதில் பொருந்தும் சுவையுமாக-எள்ளும் அதனுள் இருக்கும் எண்ணையும் என்று சொல்லும்படிப் பிரியா இயல்பு கொண்டு வாழ்ந்தோம். நீரை விட்டுப் பாலைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவைபோல் நீ வந்தாய் எங்களைப் பிரிவு செய்ய. பூவும் மணமுமாக இருந்த எங்களைப் பிரிக்க வண்டாகவும், சொல்லும் பொருளுமாக வாழ்ந்த எங்களை வேறுபடுத்தப் புலவ னாகவும், உடலையும் உயிரையும் பிரித்தெடுக்கும் எமனாகவும், கரும்பையும் சுவையையும் தனித்தனியாக்கும் ஆலையாகவும் எள்ளை விட்டு எண்ணெயை எடுக்கும் செக்காகவும் நீ வந்து தோன்றினாய்' என்கின்றாள் (இது பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் பாடியது). பிரிவச்சம்: தலைவி தலைவன் பிரிவான் என அஞ்சுவதும், தலைவன் அவளைப் பிரிவு அஞ்சுவிப்பதும் பிரிவச்சமாகும் தலைவன் நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன் என்று சொல் வான். தலைவன் பிரிவதை இறையனார் களவியலுரையாசிரியர் "கருங்குழற் கற்றை மருங்குற இருத்தி, அளகமும் நுதலும் தகை பெற நீவி, ஆகமும் தோளும் அணி பெறத் தைவந்து, குளிர்ப்பக் கூறித், தளிர்ப்ப முயங்கிப் பிரிவான் என்று மிக நயம்படக் கூறுவர். இதுவே பிரிவச்சம். எ-டு: குறுந் 300. பிரிவாற் றாமை; துணைவர்கள் ஒருவரை யொருவர் பிரித் திருத்தலைச் சகியாமையற்றிக் கூறப் பெறுவது இத்துறை. புதிதாக மணந்து கொண்ட இருவரின் காதல் வாழ்வுக்குக் குறுக்கே காந்தியின் போர் வந்து கலந்து விட்டது. காதலன் போர்க் கோலம் கொள்ளுகின்றான்; காதலி கலங்கிக் கண்ணிர் பெருக்குகின்றாள். அவளைத் தேற்றி ஆறுதல் மொழி பகர் கின்றான் அவன். காந்தி கலித்துறை அந்தாதியில் ஒரு பாடல்: பெண்ணர சே! என் பிரிவுக்கு இரம்கல் பெருமையல; கண்ணொளி யே!உயர் காந்தி களத்தில் கலந்திடவே