பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களவு பற்றிய விளக்கம் 49 வேட்கை தோற்றாமையின், பாலதனையான் ஒருவரை யொருவர் புணர்தற் குறிப் போடு காண்ப என்றவாறு' என்பது. கண்டதும் காதல்-கண்ட முதற்பார்வையிலே காதல் கொண்டு விடுதல்-என்ற கோட்பாடுஒருபால் மறுத்திருப்பது ஈண்டுக்கானத் தக்கது. ஆண் பெண் என்ற இருபாலாரையும் சந்திக்க வைத்தது விதியின் செயலன்று. அவர்கள் முதன்முறை சந்திக்கலாம்; எத்தனையோ முறை இதற்கு முன்னும் சந்தித்தும் இருக்கலாம். இச்சந்திப்பு எல்லாம் பாலதானையில்லை. முதல் நாள் பார்வை யிலோ பின்னாள் பார்வையிலோ காதலோடு பார்க்கச் ’செய்வதே விதியின் ஆணையென்று தெளிவிப்பர் இளம் பூரணர். இக்காதற் புணர்ச்சியே ஊழ் கூட்டிய இயற்கைப் புணர்ச்சி என்று பொது வாகப் பெயர் பெறும். தலைவியும் தலைவனும் ஆகிய விதி முன்னரே இருப்பினும் தோன்றாது. காலம் பார்த்து அடங்கிக் கிடக்கும். காலம் என்பது ஈண்டு இருவரும் காமம் நுகர்தற்குரிய குமரப் பருவம் அப்பருவம் எய்தாமல் கண்ணில் காதல் நோக்கம் அரும்பாது, பிறர் கண்ணில் எழும் காதல் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் இராது. ஆகவே, அடங்கிக் கிடக்கும் ஊழ், புணர்தற்குரிய இருவரும் ஆளான பின்னர்த்தான் வெளிப்படுவது முறை; பயனும் அதுவே. இது கருதியே தொல் காப்பியர் இக்கூட்டத்தைக் காமக் கூட்ட்ம் என்றும், இறை யனார் களவியலுரையாசிரியர் ‘காமப்புணர்ச்சி' என்றும் குறியீடு செய்து வழங்கினர். பின்னவர் தலைமகனும் தலைமகளும் தமிழராய் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுத் தம் உணர்வினரன்றி வேட்கை மிகுதியால் புணர்வது என்று இதனை விளக்குவர். இருவருடைய சிறந்த குணங்களும் வேட்கை மிகுதியால் புனல் ஒடு வழி புல் சாய்ந்தாற் போல் அமைந்து கிடக்க, இருவரும் புணர்தல் காமப்புணர்ச்சி என்று பெற வைப்பர். ஏனைய இரண்டு குறியீடு களினும் இது சிறந்தது; விரும்பத் தக்கது. காதலர்தம் மனவொற்றுமையே அகத்திணையின் உயிர்ப் பண்பு. இவ்வொற்றுமையை உள்ளப் புணர்ச்சி' என்று அக விலக்கணம் குறியீடு செய்து காட்டும். அகத்திணைப்பாடலுக்கும் அகத்துறைப் பாடலுக்கும் இந்த உள்ளப்புணர்ச்சி இன்றியமை யாதது; புறநடை இல்லாதது; இறைமை சான்றது. அகம் பாடும் புலவர்கள் இந்த அடிப்படையை நினைந்தே பாடுவர். உள்ளப் புணர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஒருவரோ டொருவர் உரையாடுதல் முறையன்று: கண்களே அக் காமக் குறிப்புரையை நிகழ்த்து - و س--- اوایی