பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6t அகத்தினைக் கொள்கைகள் வொழுச்சத்தினை! தான் உ ணர்ந்ததோடு ஒச்குமன்றே இவன் உணர்ந்தது! அவனைத் தன்னின் வேறல்லன் என்று கருதினமை யான் அமையும். திருக்கோவையார் உரையும் இக்கொள்கை யினையே, பாங்கற் கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும்: இடந்தலைப்பாடுநிசழாதாயின்பாங்கற்கூட்டம் நிகழும்' என்று கூறுதலையும் காண்க." ஐயமும் தெளிவும் : மேற்கண்டவாறு இறையனார் கள வியலில் கூறப் பெற்றிருக்க, ஆசிரியர் தொல்காப்பியனார் மெய் தொட்டுப் பயிற்றல் என்னும் நூற்பாவில்" இடந்தலைப் பாட்டிற்குரியவையாக எட்டுக் கிளவிகளை முதலிற் கூறி, அதன் பின்னர்ப் பாங்கற் கூட்டத்தின் துறைப் பொருள்களைக் கூறு தற்குக் காரணம் யாதோ என்ற வினா எழலாம். இவ்விரு பேராசிரியன்மாரும் இவ்வாறு முற்றும் நேர் முரணாகக் கூறும் பொருள் முறையுண்மையைப் பேராசிரியர் என்னும் உரையாசிரியர் இனிது இணக்கி உண்மைப்பொருள் கிளந்து மயக்கம் தெளிவிப்பர். ஆசிரியர் தொல்காப்பியனார் களவு என்னும் கைகோளை உணர்த்துவதற்கு, - • காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்(று) ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே.” என்று கூறும் செய்யுளியல் நூற்பாவிற்குப் பொருள் எழுதும் பேராசிரியர், 'காமப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந்தலைப்பாடு நிகழாதெனவும், அவ்விடந்தலைப்பாடு பிறர்பயத்தல் அரிதென்பது அவள் ஆயத்தோடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலும், தன் வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலுமென இந்நான்கு முறையான் நிகழும் களவொழுக்ககம் என்றவாறு' என்று உரை கூறுவர். . - இதனுள் காமப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந்தலைப்பாடு: நிகழாது என்ற குறிப்பு காணப் பெறுதலை அறிக. ஆனால், இடந்தலைப்பாடு நிகழ்ந்தன்றிப் பாங்கற்கூட்டம் நிகழாது என்ற 7. திருக்கோவை - 49 இன் உரை. 8. களவியல் - 11 . . 9. செய்யுளி - 186