உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகத்திய முனிவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குணம் 63

மாறன்றோ? என்று அவர் வாதாடி நின்றார். இவர்,வேதம் என்ன கூறியுள்ளது? என்றார். அவர், அசம்கொண்டு யாகம் செய்க என்று கூறியுள்ளதே என்றார். "அசம் பெய் தவிசொரிந் தாற்றி வானோர் - வசம் பெய் தருளின் மாநிலஞ் செழிக்கும்' என இன்னவாறு அதன் பெயர் குறித்துப் பின்னவரும் உரைத்துள்ளாரே என்று அவர் எதிர்த்து நின்றார். இவர் அசம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை? என்றார். அவர், "ஆடு" என்றார். அது மூவாட்டை நெல்லைக் குறித்ததேயன்றி, ஆட்டைக் குறிக்க வில்லை; மொழிப்பொருள் தெரியாமல் நீவீர் இங்ஙனம் வழுப்படல் தீது; கொல்லுதற்றொழிலில்லாமல் அந்நெல்லைக்கொண்டு இவ்வேள்வியைச் செய்மின் என இவர் விதித்தருளினார். அவர் எதிர்த்துரைக்க அஞ்சி அப்படி யாயின் அடிகளே இதனை அவ்வாறு செய்துமுடிக்கவேண்டுமென்று சேர்ந்து மொழிந்தார். இவர் சரி என இசைந்து அவர் காணும்படி பொதியையின்கண் இருந்து அந்நெல்லைக்கொண்டே சொல்லிய அவ் வேள்வியை முடித்து இந்திரனை வந்து அவி ஏற்றுக்கொள்ளும்படி சிந்தித்தார். வழக்கத்திற்கு மாறாக செய்து இங்ஙனம் வலிந்திழுக்கின்றாரே என்று அவன் வராமல் மறைந்து நின்றான். உடனே இவர் அரன், மால், அயன், என்னும் முதல்வர் மூவருக்கும் அவியினை அளித்துவிட்டுத் தவவலியால் பல வளங்களும் சுரக்கச் செய்து இவ்வுலகினை யுயர்நிலையில் நிறுத்தி அவியே லாது நின்ற அமரர் கோனை இவர் சிறிது சினந்து நினைந்தார். அவன் அஞ்சி வந்து இவர்பால் அடங்கி நின்று "மகத்திற் கொல்லப்பட்ட உயிர் பரத்திற் செல்லுமே; ஆதலால் அது கொலை வினையாகாதே; ஏன் அடிகள் அதனை