௯௮
அகநானூறு
[பாட்டு
நிறைந்த சூலினையுடைய கரிய மேகம், சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி - ஒளி மிக்க மின்னலுடன் வலமாக எழுந்து சென்று ஒலித்து, என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி - ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய - மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து விளையாட, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி - நிலத்தினும் வானினும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட, குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது - குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறலன்றி, கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர - ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம் அஞ்சுதலடைய, பாஅய் தளி மயங்கின்று - எங்கும் பரந்து பெய்யும் மழையொடு பொருந்தியது;
அ- கஉ. யாமே - நாம், கொய் அகை முல்லை காலொடு மயங்கி - கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின், மையிருங் கானம் நாறும் நறு நுதல் - கரிய பெரிய காடு நாறுவதென்ன நாறும் நறிய நுதலினையும், பல் இருங் கூந்தல் - பல வகை முடி சான்ற கரிய கூந்தலினையும், மெல்லியல் - மென்மைத் தன்மையினையும் உடைய, மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் - நம் தலைவியின் நல்ல அழகுடைய ஆகத்தினைப் பிரியாதிருக்கின்றோம் ;
கஉ-ரு. அளி இன்று - இரக்க மின்றி, ஏதில் பொருட் பிணிப்போகி - அயல தாகிய பொருளீட்டும் பற்றுக்கொண்டு பிரிந்து சென்று, தம் இன் துணைப் பிரியும் மடமையோர் - தமது இனிய துணைவியைப் பிரியும் மடமையை யுடையோர், என்றும் அளியரோ அளியர் - எஞ்ஞான்றும் மிகவும் இரங்கத்தக்கார்.
(முடிபு) எழிலி, மழை ஏர்பு இரங்கிப் பாஅய்ப் (பெய்யும்) தளியொடு மயங்கின்று; யாம் மடந்தை ஆகம் சேர்ந்தனம்; துணைப் பிரியும் மடமையோர் அளியரோ அளியர்.
(வி - ரை.) பெய்யும் தளியென ஒரு சொல் வருவித்துரைக்க. ஒன்ற, அஞ்சுவர என்னும் செயவெனெச்சங்கள் பெய்யும் என வருவித்த பெயரெச்ச வினை கொண்டு முடியும். மழை - மேகம். கைமாய் நீத்தம்: கை - நீர் ஆழம் காட்டுவார் கையுமாம். ஒன்றி - ஒன்ற எனத் திரிக்க. கன்னல் - நாழிகை வட்டில்; நாழிகையுமாம். தளி - மழை. தண் குரல் எழிலி என்பது ஆகுபெயரால் கார்காலத்தை யுணர்த்திற்று. கொய் முல்லை, அகை முல்லை என்க. அகைத்தல் - தழைத்தல்; கிளைத்தலுமாம். காலொடு - காலால். மயங்குதல் - நெருங்குதல். அளியரோ அளியர் என்னும் அடுக்கு மிகுதி பற்றியது. கழைமாய் என்பது பாடமாயின் ஓடக் கோல் மறையும் நீத்தம் என்க.