பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

களிற்றியானை நிரை

௧௦௭

 (வி - ரை.) விலங்கெழுந்து பாய்தலின் என இயையும். கடுவளி விலங்கெழுந்து உருத்திய என்றுமாம். விடராகிய முகை என்றுமாம். முகை - குகை.

கைமிக்குக் கலிழ்வோள் எனக் கூட்டுக. செழியன் சிறுமலை யாகிய வெற்பின் என்று இயைக்க. சிறுமலை, பெயர். புறவின் சேவல் வீழ்துணைப் பயிரும் மாலை என்றது தலைவர் நம்மை விரும்பி அணைந்திலரே எனத் தலைவி எண்ணி இரங்குவள் என்பதனைப் புலப் படுத்தி நின்றது 1'இரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப், பொறிமயி ருத்தற் குறுநடைப் பேடை . . . தயங்க விருந்து புலம்பக் கூஉம்' என்பது இதனொடு ஒத்து நோக்கற்பாலது.



48. குறிஞ்சி

(செவிலித் தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது.)


அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி அதன்றிறம்
யானுந் தெற்றென உணரேன் மேனாள்

ரு) மலிபூஞ் சாரலென் தோழி மாரோ
டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்

க0) பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படரென
வினவி நிற்றந் தோனே அவற்கண்டு

கரு) எம்முள் எம்முள் மெய்ம்மறை பொடுங்கி
நாணி நின்றனெ மாகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மையீர் ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன் பையெனப்

உ0) பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்
தவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்

உரு) மகனே தோழி என்றனள்
அதனள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே.

-- தங்கால் முடக் கொற்றனார்.


1. குறுந், கரு௪.