பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

களிற்றியானை நிரை

௧௦௯


தோழி இவன் மகனே என்றனள் - தோழியே இவன் ஒரு ஆடவனே என்ற னள்;

உ௬. மதி வல்லோர்க்கு - ஆராய்ந்து அறியும் அறிவு மிக்கோர்க்கு, அதனளவு உண்டு கோள் - அதனளவாக ஓர் கோட்பாடு உண்டு .

(முடிபு) அன்னாய் வாழி! வேண்டு, நின் மகள் பசந்தனளென வினவுதி, யானும் தெற்றென உணரேன், மேனாள் தோழிமாரோடு சென்றுழி, பூசல் தோன்ற, ஒரு தலைவன் வினவி நிற்றந்தோன்; அவற் கண்டு, ஒடுங்கி நின்றனமாக, நும் வாய்ப் பொய்யும் உளவோ என்றனன்; அக் குன்றுக் கிழவன் தேரன், நோக்கிச் சென்றனன்; தலைவி அவன் மறை தேஎம் நோக்கி இவன், மகனே என்றனள்; வல்லோர்க்குக் கோள் உண்டு.

(வி-ரை.) பசந்தனள் என வினவுதி . பசந்தனள் அதன் காரணம் யாதென வினவுகின்றாய் என விரித்துரைக்க. வேங்கை மரத்திற் பூக் கொய்வார், புலி புலியென்று கூவின், அதன் கிளை தாழ்ந்து கொடுக்கும் என்பது வழக்கு. கழுநீர் இதழ் என்க. இதழ் - பூ. ஊசி போகிய - அல்லியைக் கழித்துத் தொடுத்த என்றுமாம் ; ஊசி - ஊசிபோன்ற அல்லி. குயம் மண்டு என்பது மார்பிற்கு இயற்கையடை. நீவி - பூசி; - உதிர்த்து என்றுமாம். மா படர் திறம் என மாறுக. நிற்றந்தோன் - நிற்றல் தந்தோன் ; நின்றோன். பேணி - புழுகு முதலியவற்றாற் பேணி என்றுமாம். கூந்தல் என முன் வந்தமையின் ‘மையீரோதி மடவீர்' என்றது பெயர் மாத்திரையாகி நின்றது. எதிர்மறுத்து நோக்குதலாவது, தலைவி தன்னை நோக்காதிருக்க, தான் அவளை நோக்குதல். தலைவன் நோக்குழித் தலைவி எதிர் நோக்காள் என்பதனை, 1'யானோக்குங் காலை நிலனோக்கும்' என்பதனாலறிக,

(மே - ள்.) 2'எளித்த லேத்தல்' என்னும் அறத்தொடு நிலை கூறுஞ் சூத்திரத்து, ஏதீடு என்பதற்குக் காரணம் இட்டு உணர்த்தல் என்று பொருள் கூறி, இதனைப் புலி காத்தற்கு வந்தானென இட்டுரைத்தது என் றும், 3'உயர்மொழிக்குரிய' என்னுஞ் சூத்திரத்து, 'அவன் மறை தேஎம் நோக்கி மற்றிவன் - மகனே தோழி யென்றனள்' என்பது, தலைவி ஐயத்துக் கண் தெய்வமென்று துணிந்தாள் அல்லள் என்றும், கூறினார் நச்.

4'இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து, 'அன்னாய் . . . வினவுதி' என்றது, பசியட நிற்றல் என்னும் மெய்ப்பாடாமென்றும், 5'பிறப்பே குடிமை' என்னுஞ் சூத்திரத்து, 'நின்மகள் . . . என்றனள்' என்பது, உருவு நிறுத்த காமவாயில் என்றும் கூறினர் பேரா.

6'எளித்தல் ஏத்தல்' என்னுஞ் சூத்திரத்து, இது தலைவனை உயர்த்துக் கூறுதல் என்றும், 7'உற்றுழியல்லது' என்னுஞ் - சூத்திரத்து 'அன்னாய் வாழி ... வினவுதி' என்ற வழி செவிலி குறிப்பினால் உணர்ந்தவாறு இது என்றும் கூறினர் இளம்.




1. குறள். க0௬௪. 2. தொல். பொருள். க௩. 3. தொல். பொருளி. ௪௪. 4. தொல். மெய். உஉ. 5. தொல். மெய், உரு. 6. தொல். பொருளியல். ௧௨. 7. தொல், பொருளி. க௩.