உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

களிற்றியானை நிரை

௧௧௯

(முடிபு) தோழி வாழி! நீளிடைக் கடத்திடை இயவில் நாய் பிணவொடு நடுகல் நிழலில் வதியும் சுரக்கவலை நீந்திக் காதலர் காதலித்தது பொருளே; நீ அருளே என்றி; அறியாய்.

(வி-ரை.) விளங்கும் திகிரி - விளங்குதற்கு ஏதுவாய திகிரி ; விசும்பில் விளங்கு மெனலுமாம். - எறித்த விடுவாய் : பெயரெச்சம் காரணப் பொருட்டு; ஆறு சென்றவியர் என்றாற் போல. விடுவாய் - பிளப்பு. கடம் - கன்னிலம். நொள்ளை - நத்தை யினமாகிய சிறு பூச்சிகள். விழுத்தொடை - தப்பாத தொடையுமாம், தொடை - தொடுத்தல். வேறு நிழலின்மையின் கல்லின் நிழல் இனிய நிழலாயிற்று. பொருள் இல்லாதிருக்கச் செய்தே முயன்று தேடும் வலியுடையராயிருந்து இரவலர்க்குப் பொருள் இல்லை யென்னின் அதுவும் இயைவது கரத்தலாகும் என்பது பெற்றாம்.

காதல் - காதலித்தது. நீந்திக் காதலித்தது பொருளே யென்க. அருளே காதலர் என்பதற்கு, அருளையே காதலித்தலுடையர் என்றலுமாம்.

(மே - ள்.) 1'புணர்தல் பிரிதல்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது பிரிதல் நிமித்தம்; வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது' என்றும் 2'நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது என்றுங் கூறினர் நச்.



54. முல்லை


[வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.]


விருந்தின் மன்னர் அருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்

ரு) வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்
கடவுக காண்குவம் பாக மதவுநடைத்
தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்
கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பய நிரை யாயம்

க0) கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
மனைமனைப் படரும் நனைநகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்

க௫) 3புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்



1, தொல், அகத். க௪. 2. தொல். அகத், ௪௩. (பாடம்) 3. புன்கால் நெல்லி.