உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௧௨௦

அகநானூறு

[பாட்டு


நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென

உ0 விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை யல்குலெங் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

- 1மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்.


(சொ - ள்.) ௧. 'பாக - பாகனே!

க-௩. விருந்தின் மன்னர் - புதிய அரசர், அருங்கலம் தெறுப்ப - திறையாக அரிய அணிகலன்களைக் குவிப்ப, வேந்தனும் வெம் பகை தணிந்தனன் - நம் அரசனும் கொடிய பகைமை தணியப்பெற்றனன்; தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று - மேகமும் இனிய பெயலை மிக்க ஒலியுடன் பெய்தது;

௩-௬. ஓவத்து அன்ன கோபச் செந்நிலம் - ஓவியம் போன்ற இந்திர கோபத்தையுடைய சிவந்த நிலத்தே, தேரும் வள் வாய் ஆழி உள் உறுபு உருள - தேரினை அதன் உறுதி வாய்ந்த உருளை நிலத்தே பதிந்து உருண்டுவர, கடவுக - செலுத்துவாயாக;

௬-கஉ. படுமணி மிடற்ற பயநிரை ஆயம் - ஒலிக்கும் மணி கட் டிய கழுத்தினை யுடைய பாற்பசுக்களாகிய இனம், கொடு மடி உடையர் - வளைந்த மடிகோலிய உடையினராகிய, கோல் கைக் கோவலர் - கோலைக் கையிலுடைய இடையர், கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க - கொன்றையினது கனியானாய அழகிய குழலினை யிசைப்பவராய்ப் பின்னே மெத்தென நடந்துவர, மதவு நடைத் தாம்பு அசை குழவி - செருக்கிய நடையினை யுடைய தாம்பிற் பிணிக்கப் பெற்ற இளங்கன்றுகளிடத்தே, வீங்கு சுரை மடிய - பெருத்த மடி கரையவேண்டி, கனையலங் குரல - கனைக்கின்ற குரலவாய், கால் பரி பயிற்றி - காலால் விரைதலைப் பயிலச் செய்து, மனை மனைப் படரும்மனை தோறும் செல்லும், நனை நகு மாலை - அரும்புகள் மலரும் மாலைக் காலத்தே,

க௩-௬. தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் - தனக் கென்றே வாழாத பிறர்க்கெல்லாம் உரியவனாகிய, பண்ணன் சிறு குடிப் படப்பை- பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்தில் உள்ள, நுண் இலைப் புன்காழ் நெல்லி - சிறிய இலையினையும் புல்லிய வித்தினை யுமுடைய நெல்லியின், பைங்காய் தின்றவர் - செவ்விக் காய்களைத் தின்றவர், நீர்குடி சுவையில் - நீர் குடித்த காலை எழும் சுவைபோல,

க௬- உஉ. முகிழ் நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள் - அரும்பும் நிலவினால் விளங்கும் இளைய மதியே!


(பாடம்) 1. நொச்சி நியமங்கிழார் மகனார் ...