பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

களிற்றியானை நிரை

௧௨௫

________________

மயங்கிய நெஞ்சினனாய், தொழுது நின்றது - என்னைத் தொழுது நின்ற நிலை,

க. நகையாகின்று - நகையை விளைப்பதாகின்றது.

(முடிபு) தோழி ஊரன் அகலம் புதுவோர்ப் புணரிய வரும் பாணன், புனிற் றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு எம்மனைப் புகுதந்தோன்; அது கண்டு எதிர் சென்று இம்மனை யன்று அஃது என்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றது; நகையாகின்று.

(வி-ரை.) மணி - பளிக்குமணி. துணி - தெளிவு. குவளை கூம்பு விடுமலர் என்றமையால், ஆம்பல் குவிதல் பெற்றாம். புகுதரும் என்னும் எச்சம் ஊரன் என்பதன் முதனிலை கொண்டு முடியும். புதுவோர் - புதிய பரத்தையர். நோக்கி - நோக்கல் நோக்கம். என்னும் தன்னும் நோக்கி - யான் இகழுதலையும் தனது இளிவையும் கருதி. தொழுது நின்றது நகையாகின்று என்றது பிறன் பேதைமை பொருளாக நகை யென்னும் மெய்ப்பாடு தோன்றியது.

(உ - றை.) "இரும்பியன்றன்ன கருங்கோட் டெருமை கயங்கலங்க ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலரை மாந்திக் காஞ்சி நுண்டாது புறத்துறைப்ப மெல்கிடு கவுளவாய்த் தங்கு நிலைக்கட் புகுதரு மென்றது, இரும்பு போன்ற நெஞ்சினையுடையராகிய பரத்தையர் ஊர்முழுதுங் கலங்கத் தான் முன்பு கூடின பரத்தையர் தாய்மார் கலங்க, அப் பரத்தையர் அவ் வாம்பற் பூப்போலக் குவியக், குவிதல் விட்ட குவளை மலர்போலும் பூப்பெய்து கொள்ளப்பட்ட பரத்தையரை நுகர்ந்து வருகின்ற காலத்து, வழியிலகப்பட்ட சேடியர் முதலாயினாரை நுகர்ந்து, பின்னுஞ் சிலரைக் கூடக் கொடுநாக் கெறிந்துகொண்டு நம் மனையிலே தங்குதற் பொருட்டு வருகின்றான் என்று தோழிக்கு வாயில் மறுத்தது". என்பது குறிப்புரை.

(மே - ள்.) 1‘எள்ள லிளமை' என்னுஞ் சூத்திரத்து, 'நகை யாகின்றே தோழி . . .' என்பது, எள்ளல் பொருளாக நகை பிறந்த தென்று இளம் பூரணரும், 'பிறன் பேதைமை பொருளாக நகை பிறந்த' தென்று பேராசிரியரும் கூறினர்.57. பாலை


[பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.]


சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
நெடுநீர் வானத்து வாவுப்பறை நீந்தி
வெயிலவிர் உருப்பொடு வந்துகனி பெறாஅது
பெறுநாள் யாணர் உள்ளிப் பையாந்து

ரு) புகலேக் கற்ற புல்லென் உலவைக்


1. தொல். மெய். ௪.