64
களிற்றியானை நிரை
௧௩௯
வகையமை வனப்பின் வள்புநீ தெரியத்
தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி
ரு) ஐதிலங் ககலிலை நெய்கனி நோன்காழ்
வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்
செலவுநாம் அயர்ந்தன மாயின் பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின்
விடுநெறி ஈர்மணல் வாரணஞ் சிதரப்
க0) பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குத்தி
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ
ஊர்வயிற் பெயரும் பொழுதில் சேர்புடன்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்
கரு) ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசை
புலம்புகொள் மாலை கேட்டொறுங்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
-ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்.
(சொ - ள்.) க. பாக - பாகனே!
க-௩. உளை அணி - பிடரி மயிரணிந்த, உலகு கடப்பு அன்ன - உலகத்தையே கடத்தல் வல்லது போன்ற, புள் இயல் கலிமா - பறவையையொத்த வேகம் கொண்ட செருக்குடைய குதிரையின், வகையமை வனப்பின் - செலுத்துங் கூறுபாடமைந்த வனப்பினை யுடைய, வள்பு நீ தெரிய - கடிவாள வாரினை நீ ஆராய்ந்து கொள்ள,
ச- எ. தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெருவழி - செம் முல்லையின் அரும்பு விரிந்த குளிர்ந்த செவ்வியைக் கொண்ட பெரு வழியில், ஐது இலங்கு அகல் இலை நெய்கனி நோன்காழ் - அழகிதாக விளங்கும் அகன்ற இலையினையும் எண்ணெய் கனியப்பெற்ற வலிய தண்டினையும் உடைய, வென்வேல் இளையர் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய ஏவலர், வீங்கு பரி முடுக - (தாளால் ஏகும்) விரைந்த செலவில் மிகு வேகங்கொள்ள, செலவு நாம் அயர்ந்தனமாயின் . செல்லும் செலவினை நாம் விரும்பினமாயின்,
எ-கஎ. பெயல கடுநீர் வரித்த செந்நில மருங்கின் - மழையினுடைய கடுகிய நீர் வரிவரியாக இழைத்த செம்மண் நிலப் பக்கத்தே, விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர - தேர்விடும். நெறியி லுள்ள ஈர மணலைக் கானங் கோழி கிளற, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறங் குத்தி - பாம்பு அடங்கிய புற்றின் குளிர்ந்த மேற்புறத்தைக் குத்தி, மண்ணுடைக் கோட்ட - கோட்டு மண் கொண்ட, அண்ணல் ஏறு - தலைமை மேவிய ஏறு, உடன் நிலை வேட்கையின் மடநாகு தழீஇ - (எக்காலத்தும்) தன்னோடு உடனிற்றலை விரும்பிய தனது இளைய பசுவினைத் தழுவிக்கொண்டு, ஊர் வயின் பெயரும் பொழுதில் - ஊரின் கண் மீண்டு வரும் பொழுதில், சேர்பு உடன் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் - யாவும் ஒருங்கு சேர்ந்து கன்று