பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

களிற்றியானை நிரை

௧௪௯

கழன்றிடும் நம்மிடத்து, படர்ந்த உள்ளம் பழுது அன்றாக - மேவிய தமது உள்ளம் குற்ற மற்றதாக,

கச-உக. அந்தரத்து - வானிடத்தே, இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூ - இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமாய பல மேகங்கள், தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப- நீங்குதலில்லாது (பெய்தமையால்) எழுந்த வெள்ளங்கள் இடந்தொறும் மிகுதலால், கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் - யானைக்கன்றின் கால்களை இழுத்துச் செல்லும் கடிய சுழியினையுடைய வெள்ளத்தில், புன் தலை மடப்பிடிப் பூசல் பலவுடன் - மெல்லிய தலையினையுடைய இளைய பெண் யானைகளின் ஆரவாரங்கள் பலவுடன், வெண்கோட்டு யானை விளிபடத் துழவும், வெள்ளிய கொம்பினையுடைய களிறுகள் தாம் அழைக்கும் ஒலியும் சேரத் தடவிக் கொண்டிருப்பதும், அகல் வாய்ப் பாந்தள் படாஅர் - அகன்ற வாயினை யுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய, பகலும் அஞ்சும் - பகற்பொழுதினும் அஞ்சப்படும், பனிக் கடுஞ்சுரம் - மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில், வந்தனர் - வந்துள்ளார்.

(முடிபு) தோழி! வாழி! 'அன்னாய் வாழி! கேட்டியோ' எனவும், பின்னும், “கேட்டியோ' எனவும், நம் அன்னை அறியாள் கனைதுயில் மடிந்தனள்; அதன்றலை மன்னுயிர் மடிந்தன்று பொழுது; காதலர் வருவராயிற் பருவம் இதுவென நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுதன்றாக சுரம் தலைவர் வந்தனர்.

(வி-ரை.) என்னதும் - சிறிதும். 'பின்னுங் கேட்டியோ எனவும்' என்பதிலுள்ள எனவும் என்பதனை என்னதூஉங் கேட்டியோ எனவும் என முன்னரும் வருவித்துரைக்க. அன்னையின் துயில் நிலையை உணரக் கருதியவள் அருவி யோசையைக் கேட்டாயோ என முதலிற் கூறிப் பின்பு அதனினும் துணுக்கத்தினை விளைக்கத்தக்கதாக இடியோசையைக் கேட்டாயோ என்று உரைத்தாள். 'அன்னாய் வாழி வேண்டன்னை ' என இருமுறையும் அடுக்கி விளிப்பதும் அவளது துயிலின் பெற்றியை அறிதற் பயத்ததேயாகும். ஒருவாற்றானும் அவள் உணர்ந்தெழாமையின் 'கனை துயில் மடிந்தனள்' என்றாள். கனை துயில் மடிதல் - தூக்கத்தில் ஆழ்ந்து விடுதல். இதனால் தாய் துஞ்சுதலும், மன்னுயிர் மடிந்தன்றாற் பொழுது என்பதனால், ஊர், காவலர், நாய் முதலியவை துஞ்சுதலும் கூறினாள். ஒய்தல் - செலுத்துதல். வெள்ளத்தில் கன்று இழுக்கப்படுதலால் பிடியும் களிறும் முறையே பூசல் செய்து, விளித்துத் துழவின. பாந்தட் படார் - பாம்பு போலும் இயல்பினையுடைய ஒரு செடி. யானை துழவுதலானும் பாந்தட் படாரையுடைமையானும் சுரம் பகலினும் அஞ்சப் படுவதாயிற்று. துழவும் சுரம், படாரையுடைய சுரம், அஞ்சும் சுரம் எனத் தனித்தனி இயையும். இனி, பிடியின் பூசலும், யானையின் விளியும் உண்டாகக் கேட்டு, அவற்றை உண்டற்குத் துழாவுகின்ற பெரும் பாம்புகள் பொருந்திய காட்டினையுடைய சுரம் என்று உரைத்தலும் ஆம். இப் பொருட்குப் படார் என்பது காடு என்னும் பொருளதாகும். பாம்பு யானையை உண்ணவல்லது என்பதை