உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௫௦

அகநானூறு

[பாட்டு


1'இடிகொள் வேழத்தை யெயிற்றொடு எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம்' என்பதனானும் அறிக.

(உ - றை.) 'யானைகளும் கன்று காரணமாகப் பிடிவருந்திய பின்பு எடுக்க முயன்றாற்போல, அவரும் அலரானும் வழியதருமையானும் நாம் நலனழிந்த பின்பு வரைய முயலுவதல்லது முன்பு முயலாரென்பது' என் றது குறிப்புரை.

(மே - ள்.) 2'குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி' என்னுஞ் சூத்திரத்து ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை என்புழி இன்னதனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிறவெனின், உவமை யென்னும் அலங்காரமாயினன்றே இன்னதொன்றனை யெனல் வேண்டுவது; செயலையந் தளிரினது செய்யாத நிறத்தைச் செய்தது போலக் கூறுங் கருத்தினனாதலிற் பிறிதோர் அலங்காரமாம்' என்றார் சேனாவரையர்; ஊட்டாததனை ஊட்டியது போலக் கூறலின் வேறோர் உவமை யிலக்கணமாம் என்பர் நச்சினார்க்கினியர். 'நாற்றமும் தோற்றமும்' என்னும் தோழி கூற்று உணர்த்தும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது தாயது துயிலுணர்ந்து, தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது என்றனர் நச்.



69. பாலை


[பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான் தலைமகன் எனக் கவன்ற தலை மகட்கு வருவர் என்பதுபடச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.]



ஆய்நலந் தொலைந்த மேனியும் மாமலர்த்
தகைவனப் பிழந்த கண்ணும் வகையில
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்

ரு) ஈதல் இன்பம் வெஃகி மேவரச்
செய்பொருட் டிறவ ராகிப் புல்லிலைப்
பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னா தேமுற்று

க0) விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்)
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த '
அறையிறந் தகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடியல்
மடமயில் ஒழித்த பீலி வார்ந்துதம்

கரு) சிலைமாண் வல்விற் சுற்றிப் பலமாண்
அம்புடைக் கையர் அரண்பல நூறி


1. கம்ப. சித்திரகூடம். ௩௫. 2. தொல், கிளவி. ரு௬. 3. தொல். களவு. உ௩.