உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

களிற்றியானை நிரை

௧௫௭

அருள்புரி நெஞ்சமொ டெஃகுதுணை யாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த

உ௦ நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே.

-எருமை வெளியனார் மகனார் கடலனுர்

(சொ - ள்.) க-எ. ஆறு - தலைவன் வரும் நெறிகள், வானம் இருள் கிழிப்பது போல் மின்னி - மேகம் இருளைக் கிழிப்பதுபோல மின்னி, துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் - துளியைத் தன்னிடத்தே கொண்ட மிக்க பெயலையுடைய நள்ளிரவில், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் - மின்மினிகள் . மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை, பொன் எறி பிதிரில் சுடர வாங்கி- இரும்பினைக் காய்ச்சியடிக்குங்கால் சிதறும் பிதிர்போல அம் மின்மினிகள் ஒளிவிடப் பெயர்த்து, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை - புற்றாஞ் சோற்றினைத் தோண்டி யெடுக்கும் பெரிய கையினை யுடைய கரடியேறு, இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண் - இரும்பு வேலை செய்யும் கொல்லன் போலத் தோன்றும் அவ்விடத்து, அருமரபினவே - செல்லுதற்கு அரிய தன்மையன;

எ-௯. யாறே - யாறு, கழை மாய் நீத்தம் கல்பொருது இரங்க - ஓடக்கோல் மறையும் வெள்ளம் கல்லிற் பொருது ஒலிக்க, சுட்டுநர்ப் பனிக்கும் சூர் உடை முதலைய - கருதுவோரையும் நடுங்கச் செய்யும் அச்சமுடைய முதலைகளை யுடையன;

க௦. அஞ்சுவம் தமியம் என்னாது -யாம் தமியேம், இந்நெறிகளிற் போதற்கு அஞ்சுவேம் என்று எண்ணாது,

க௦-எ. மஞ்சு சுமந்து ஆடு கழை நரலும் - மேகத்தினைத் தலைக் கொண்டு அசையும் மூங்கில் ஒலிக்கும், அணங்குடைக் கவான் - தெய் வங்களை யுடைய பக்க மலையில், ஈருயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய - கருவுற்றிருக்கும் பெண் புலியின் வேட்கை மிக்கபசியினை நீக்க, இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை - பெரிய ஆண் பன்றியினைக் கொன்ற மிக்க சினம் பொருந்திய ஆண் புலி, நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கில் - அச்சந் தரும் நல்ல பாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கில், புலர ஈர்க்கும் - உதிரம் தோய்ந்து காய இழுத்துச் செல்லும், வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை - கூர்ங்கற்களை யுடைமையால் வாளில் நடப்பதை யொக்கும் செல்லுதற்கு அரிய வழியாய, உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறுநெறி - கடக்க எண்ணுநர் அஞ்சும் கற்செறியையுடைய இட்டிய நெறியில்,

கஅ-உஉ. அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக - நம்மேல் அருள் வைத்த நெஞ்சமொடு வேல் துணையாகக் கொண்டு, வந்தோன் கொடியனும் அல்லன் - வந்த தலைவனும் கொடியன் அல்லன்; தந்த நீ தவறுடையையும் அல்லை - அவனைக் குறிவழி வரச் செய்த