பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௬௨

அகநானூறு

[பாட்டு


(வி - ரை.) தாள் . முயற்சி. தாஅய் - தாவ எனத் திரிக்க. பனி - நடுக்கம். வன்புறை - வற்புறுத்தல். சிறு குழலின் இன்னிசையும் துன்பத்தினை மிகுவித்தலின் அதனை வல்வாய்ச் சிறுகுழல் என்றாள். மாலையும் குழலும் வருத்தாக்கால் என்க.

(மே - ள்.) 1'இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து, 2'கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே' என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார் பேரா.75. பாலை


[1பொருள்வயிற் பிரிவரென வேறுபட்ட தலைமகட்குப் பிரியேனெனத் தலைமகன் சொல்லியது.]அருளன் றாக ஆள்வினை ஆடவர்
பொருளென வலித்த பொருளல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
எரிசினந் தவழ்ந்த இருங்கடற் றடைமுதல்

ரு) கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை
அடுபுலி முன்பின் தொடுகழல் மறவர்
தொன்றியல் சிறுகுடி மன்றுநிழல் படுக்கும்
அண்ணல் நெடுவரை ஆமறப் புலர்ந்த
கல்நெறிப் படர்குவ ராயின் நன்னுதல்

க0) செயிர்தீர் கொள்கைச் சின்மொழித் துவர்வாய்
அவிர்தொடி முன்கை ஆயிழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்றுபடு விறற்கவின் உள்ளி என்றும்

கரு) இரங்குநர் அல்லது பெயர்தந் தியாவரும்
தருநரும் உளரோ இவ்வுலகத் தானென
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம்மா மேனி ஐதமை நுசுப்பின்

௨௦) பல்காசு நிரைத்த கோடேந் தல்குல்
மெல்லியற் குறுமகள் புலந்துபல கூறி
ஆனா நோயை ஆக 2யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ
அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே.

- மதுரைப் போத்தனார்.

(சொ - ள்.) கஎ-உக. மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன - மாரிக் காலத்தே ஒளிரும் இண்டையின் கரிய தளிரையொத்த, அம் மா


1. தொல். மெய்ப், உஉ. (பாடம்) 1. பொருள்வயிற் பிரிவரென வேறுபட்ட தலைமகட்குப் பிரியாரெனத் தோழி சொல்லியது. 2. அவரே பிரியச் சூழலும்,