பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௭௨

அகநானூறு

[பாட்டு


௯-கக. நம்மொடு துணைப்ப - நம் தலைவி நம்மொடு துணையாக, வல்லாங்கு வருதும் என்னது - வல்லபடி செல்வோம் என்னாது, அல்குவர வருந்தினை - இங்கே வந்து தங்கிய அளவில் வருந்துகின்றனை ; இஃதென்னை!

(முடிபு) நெஞ்சே! கல்பிறங்கு அத்தம் போகி நில்லாப் பொருட்பிணி பிரிந்த நீ, நனந்தலை அழுவம், நம்மொடு (அவள்) துணைப்ப, வல்லாங்கு வருதும் என்னாது, அல்குவர, வருந்தினை.

(வி - ரை.) சோறும் உடன் கொண்டுபோய்க் கிணறு வெட்டுதலின், தோள்பதன் அமைத்த என்றார். கல்லுறுத்தல் - கல்லுதல். வல் உவர் - மிக்க உவர். படு - கிணறு. பார் - வன்னிலம். நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா மண்டிய போகி எடுத்த துகள் என்க. வருதும் - போவோம் என்னும் பொருட்டு. நெடுவிளி பயிற்றும் என்றது, எயினர் போர்க்குச் செல்லுதல் அறிந்து பேடை துணையை அழைக்கும் என்றபடி.



80. நெய்தல்


[இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.]


கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி யிட்டுச்சுரம் நீந்தி யிரவின்
வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப
நினக்கெவன் அரியமோ யாமே எந்தை

ரு) புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பன்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப

க0) இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ
மின்னிலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தா துறைக்கும்
புன்னையங் கானல் பகல்வந் தீமே.

- 1மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்.


(சொ - ள்.) ௩. தண்கடற் சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரையையுடைய தலை வனே ! நீ,

க-௩. கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் - வளைந்த காலினையுடைய முதலையோடு சுறாமீன் இயங்கும், இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி - கரிய உப்பங் கழியாய நெருங்கிய அரிய வழியினைக் கடந்து, இரவில் வந்தோய் - இரவின் கண் வந்துளாய் ;


(பாடம்) 1. நக்கீரர்.