பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

களிற்றியானை நிரை

௧௭௫


(வி-ரை.) 1'அத்த விருப்பை யார் கழல் புதுப்பூத். துய்த்த வாய துகணிலம் பரக்க, . . . வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்' எனக் கரடி இருப்பைப்பூ உ.ண்டலும், 2'ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த, குரும்பி வல்சிப் பெருங்கை யேறறை' எனப் புறறாம் பழஞ் சோறு உண்டலும் முன்னர் வந்துள்ளமை காண்க.

கரடி அகழ்கின்ற காலத்து உயிர்த்தலின், குருகின் இடந்து என்றார். முனை - எயினர் இருப்பு. அழுவம்-போர்க்களப் பரப்பு. எம் ஐ எழில் எனப் பிரித்து வியக்கத்தக்க அழகு என்றுரைத்தலுமாம். உண் கண், ஆகு பெயர் ; தலைவியை உளப்படுத்தி எம் கண் கலுழ என்றுரைத்தாளுமாம். இது செலவழுங்குவித்தது.



82. குறிஞ்சி


[தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.]



ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுர லாகக்

ரு) கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்

க0) 1நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன்
உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்

கரு) பலர்தில் வாழி தோழி அவருள்
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓரியா னாகுவ தெவன்கொல்
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.

- கபிலர்.


(சொ - ள்.) கரு. தோழி வாழி -,

க-கரு. ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கில் - அசையும் மூங்கிலில் துளைக்கப்பெற்ற விளங்கும் துளையிடத்தே, கோடை அவ் வளி குழல் இசையாக - அழகிய மேல் காற்றினாலெழும் ஒலி குழலின் இசையாகவும், பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசை- ஒலி இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய ஓசை, தோடு அமை முழ


1. அகம். கரு. 2. அகம். அ. (பாடம்) 1. விழவுக்கள விறலியில்.