பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௯௬/196

அகநானூறு

௬[பாட்டு


உம்மை சிறப்பும்மை. 1'குரங்கறி வாரா மரம்பயி லிறும்பில்' எனப் பின்னர் இந்நூலினும், 2'மந்தியு மறியா மரம்பயி லொருசிறை' 3'மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்து' எனப் பிற நூல்களிலும் வருதலுங் காண்க. இனி, மந்தி என்பதற்கு ஞாயிறு எனப் பொருள் கொண்டு, பருதியின் கதிர் நுழையலாகாதவாறு மரங்கள் செறிந்த காடு என்னலுமாம். பகற் குறி நேர்ந்தாள் போற் கூறினும், காந்தள் அவிழ்ந்த ஆங்கண், அருவித் தாழ்நீர் ஒருசிறை என்றமையின், பூக்கொய்ய வருவாராலும் அருவியாட வருவாராலும் பகற் குறியும் அரிதென்பது புலப்படுத்தி வரைவு கடாயினா ளாயிற்று.



93. பாலை


[வினைமுற்றி மீளலுறுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற் குச் சொல்லியது.]


கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்
தாரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
ரு) அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன

பெறலரு நன்கலன் எய்தி நாடும்
செயலருஞ் செய்வினை முற்றின மாயின்
அரண்பல கடந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
க0) நாளங் காடி நாறும் நறுநுதல்

நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
கரு) நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப

முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல்
வயந்திகழ் பிமிழ்தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி
ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
௨௦) கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை

திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருதை மணலினும் பலவே.

- கணக்காயனார் மகனார் நக்கீரனார்.


(சொ - ள்.) கசு. நெஞ்சே -,


- 1. அகம். ௩௬அ. 2. நற். க௬௪. 3. முருகு. அடி, ௪உ.