பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100]

களிற்றியானை நிரை

௨௧௩/213



வம்ப நாரை யினனொலித் தன்ன
கரு) அம்பல் வாய்த்த தெய்ய தண்புலர்

வைகுறு விடியல் போகிய எருமை
1நெய்தலம் புதுமலர் மாந்தும்
கைதையம் படப்பைஎம் மழுங்க லூரே.

- உலோச்சனார்.


(சொ - ள்.) க-௪. அரை உற்று அமைந்த ஆரம் நீவி - நறு மணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி, புரையப் பூண்ட கோதை மார்பினை- உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய், நீ எல்லினில் வந்து நல் அகம் வடுக்கொள முயங்கிப் பெயர்தல் எனக்கும் இனிது - நீ இரவீனில் வந்து நினது நல்ல மார்பு வடுவுண்டாக முயங்கிப் போதல் எனக்கும் மிக இனிதாகும் : (ஆயினும்),

ரு-எ. பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த - பெரிய அலையின் ஒலியோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த, கொண்டல் இரவில் - மேகஞ் சூழ்ந்த இரவில், இரு கடல் மடுத்த கொழுமீன் கொள்பவர் - கொழுமீனைப் பிடிக்கும் பரதவர் கரிய கடலிலே மடுத்த அம்பியிலுள்ள, இருள் நீங்கு ஒள்சுடர் - இருள் நீங்குதற்குக் காரணமான ஒளி பொருந்திய விளக்கம்,

அ-க௦. ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை - பிறக்கிடாத மேற்கோளினையுடைய வேந்தன் பாசறைக்கண்ணே யுள்ள, ஆடு இயல் யானை அணிமுகத்து அசைத்த - அடுதல் வல்ல யானையின் அழகிய முகத்திற் பிணித்த, ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் . ஓடையினது ஒள்ளிய சுடர்போலத் தோன்றும் (இடமாகிய),

கக-ரு. பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் - பாடி வருவாரை வளைத்துக் கொள்ளும் கைவண்மை. வாய்ந்த கோமானாகிய, பரிஉடை நல்தேர்ப் பெரியன் - குதிரைகள் பூண்ட சிறந்த தேரினை யுடைய பெரியன் என்பானது, விரி இணர்ப் புன்னை அம் கானல் புறந்தை முன்றுறை - மலர் விரிந்த கொத்துக்களையுடைய புன்னை மரங்களை யுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடற்றுறையின் கண்ணுள்ள, வம்ப நாரை இனன் ஒலித்தன்ன அம்பல் - புதிய நாரையின் கூட்டம் ஒலித்தாற் போன்ற அலர்,

கரு- அ. தண் புலர் வைகுறு விடியல் - தண்ணென்று புலர்ந்திடும் இருள் தங்கிய விடியற்காலத்தே, போகிய எருமை நெய்தல் புதுமலர் மாந்தும் - வெளிச் சென்ற எருமை நெய்தலின் புதிதாக அலர்ந்த மலரினைத் தின்னும், கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊர் - தாழை வேலிகளையுடைய அழகிய தோட்டங்களையுடைய எமது ஆரவாரம் மிக்க ஊரின்கண், வாய்த்த - எழுந்தன.


(பாடம்) 1. நெய்தற் புதுமலர்.