பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௧௨/212

அகநானூறு

[பாட்டு


கக--௪. (மற்றும் இக் கானம்), நுந்தை அடுகளம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் - உன் தந்தை பகைவரை அடும் போர்க்களத்துப் பாய்ந்து போர் செய்தலால் பூண் சிதைந்த கோட்டினையுடையவும், பிடி மிடை - பிடிகள் சூழப் பெற்றவுமாய, களிற்றில் தோன்றும் - களிறுகளைப் போலத் தோன்றும், குறு நெடுந் துணைய - சிறியவும் பெரியவுமாய அளவினை யுடைய, குன்றமும் உடைத்து - குன்றங் களையும் உ.டையதாகின்றது ; (காண்பாயாக.)

(முடிபு) - குறுமகள், வாழியோ ! முருக்கின் செம்மல் தாஅய், முகை பிணி யவிழ்ந்த கோங்கமொடு நனை அதிரல் அசைஇ, பாதிரி அஞ்சினை உதிர் வீ எதிர் 'வீ மராஅ மலரொடு தாஅய், விராஅய், அணங்குடை நகரின் மணந்த பூவின் கானம் நன்று நயவரும்; (அது) பிடி மிடை களிற்றிற்றோன்றும் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்து ; அம்ம! கண்டிசின்.

(வி - ரை.) கோள் உகிர் - இரையைப் பற்றிய உகிரென்றுமாம் ; குருதியாற் சிவந்த உகிரென்பான் 'கோளுகிர்' என்றான் ; புலியுகிர் வண்ணமும் வடிவும் பற்றி முருக்கின் செம்முகைக்கு உவமையாயது. முலை போலும் முகையென்க. 'மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்' என்றது அளபெடை வண்ணம் ; என்னை, 1"அளபெடை வண்ண மளபெடை பயிலும்' என்றாராகலின். அம்ம, உரையசை; கேட்பித்தற் பொருட்டுமாம். பகைவரது மதிற் கதவைப் பாய்தலின் தொடி சிதைந்த தெனலுமாம். மருப்பிற் களிறு, பிடி மிடை களிறு என்க.

(மே - ள்.) 2'ஒன்றாத் தமரினும்' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் கூறி, ' இது, தலைவியை மருட்டியது' என்று கூறினர் நச்.



106. நெய்தல்


[தோழி வரைவு கடாயது.]



அரையுற் றமைந்த ஆரம் நீவிப்
புரையப் பூண்ட கோதை மார்பினை
நல்லகம் வடுக்கொள முயங்கி நீவந்
தெல்லினிற் பெயர்தல் எனக்குமா ரினிதே .
௫) பெருந்திரை முழக்கமொ டியக்கவிந் திருந்த

கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங் கொண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடியல் யானை அணிமுகத் தசைத்த
க0) ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்

பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப்
புன்னையங் கானற் புறந்தை முன்றுறை


1. தொல். செய். உக௬.  2. தொல், அகத். ௪க.