பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1தானே சென்ற நலனும்
கரு) நல்கார் கொல்லோ நாம் நயந்திசி னோரே.

- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்.

(சொ - ள்.) கரு. (தோழி), நாம் நயந்திசினோர் - நம்மால் விரும் பப்பட்ட தலைவர்,

க-ரு. நிழல் அறு நனந்தலை - நிழலற்ற அகன்ற பாலை நிலத்தே, எழால் ஏறு குறித்த - புல்லூற்றினால் எற்றுதல் குறிக்கப்பட்ட, கதிர்த்த சென்னி - பெரிய தலையினையும், நுணங்கு செந் நாவின் - நுணுகிய சிவந்த நாவினையும், விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி - தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையு முடைய, காமர் சேவல் - அழகிய குறும்பூழ்ச் சேவல், ஏமம் சேப்ப - பாதுகாவலான இடத்திற் சென்று தங்க எண்ணி, முளி அரில் புலம்பப் போகி - தானிருந்த காய்ந்துபட்ட சிறு தூறு தனித்தொழியப் போய்,

ரு-க0. முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து-வன்னி லத்தைச் சார்ந்திருந்த பழமையான பெரிய மன்றிலே, அதர் பார்த்து அல்கும் - (ஆறலைக்க) வழியைப் பார்த்துத் தங்கி யிருக்கும், ஆ கெழு சிறுகுடி - பசுக்கள் பொருந்திய சீறூரின் கண்ணே , உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன்நகர் - உறைவோர் வீட்டுப்போன இடமாகிய உயர்ந்த நிலையினையுடைய பெரிய மனையில், இறை நிழல் ஒரு சிறை - இறப்பு நிழலின் ஒரு பக்கத்தே தங்கி, புலம்பு அயா உயிர்க்கும் - தனிமையால் பெரு மூச்செறிந்திருக்கும், வெம்முனை அரும் சுரம் நீந்தி - கொடிய முனையிருப்புக்களையுடைய அரிய சுரத்தினைக் கடந்து,

க0-ரு. தம் வயின் ஈண்டு வினை மருங்கின் - தம்மிடத்து வந்துற்ற பொருளீட்டும் வினையகத்தே, மீண்டோர் என - மீண்டும் செல்லுதலுற்றாரென, நள் என் யாமத்து உயவுத் துணை ஆக - நள்ளென்ற நடு யாமத்தும் உசாவும் துணையாகும் பொருட்டு, நம்மொடு பசலை நோன்று - நம்மொடு இதுகாறும் பசலையைப் பொறுத்திருந்து இப்பொழுது, தம்மொடு தானே சென்ற நலனும் - அத் தலைவருடன் தானே வலிந்து சென்ற நம் நலனையேனும், நல்கார் கொல்லோ . நமக்கு அருளாரோ,

(முடிவு) (தோழி!) நாம் நயந்திசினோர், அருஞ்சுரம் நீந்தி, வினை மருங்கின் மீண்டோர் என நம்மொடு பசலை நோன்று தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்கொல்லோ!

எழாலேறு குறித்த சேவல், ஏமம் சேப்ப, போகி, இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயாவுயிர்க்கும் அருஞ்சுரம் என்க.

(வி-ரை.) எழால் - புல்லூறு. ஏறு - எறிதல், வவ்வுதல்; 2'கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித் தொரீஇ' என்பது காண்க. கதிர்த்த


1. தாமே. 2. புறம். ௪௩.